தை 29 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Today Rasipalan: இன்று பிப்ரவரி 11ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /12

பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். தாய் வழி உறவுகளுடன் அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் வட்டத்தில் சில புரிதல்கள் ஏற்படும். வியாபார பயணங்களால் லாபங்கள் மேம்படும். மறைமுக விமர்சனங்கள் படிப்படியாக குறையும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் அஸ்வினி : சந்திப்புகள் ஏற்படும். பரணி : அனுசரித்துச் செல்லவும். கிருத்திகை : விமர்சனங்கள் குறையும்.

2 /12

குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுதல் புரிதலை மேம்படுத்தும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். வாகன பகுதிகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். நம்பிக்கை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் கிருத்திகை : மதிப்புகள் உயரும். ரோகிணி : முதலீடுகள் அதிகரிக்கும். மிருகசீரிஷம் : முக்கியத்துவம் மேம்படும்.

3 /12

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். அந்நியத்தில் இருந்துவந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம் மிருகசீரிஷம் : தடைகளை அறிவீர்கள். திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். புனர்பூசம் :  மாற்றமான நாள்.

4 /12

உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். எதிலும் நேர்மறையுடன் செயல்படவும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உருவாகும். அனுபவம் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். பூசம் : ரகசியங்களில் கவனம். ஆயில்யம் : ஆர்வமின்மையான நாள்.

5 /12

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் தன வரவுகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உருவாகும். வியாபாரம் நிமித்தமான தடைகள் விலகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : வரவுகள் கிடைக்கும். பூரம் : கவலைகள் குறையும். உத்திரம் : தடைகள் விலகும்.

6 /12

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வருமான வாய்ப்புகளை உயர்த்துவீர்கள். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் உருவாகும். சாதனை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திரம் : உதவிகள் சாதகமாகும். அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும். சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

7 /12

மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். சுபகாரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்பு மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் சித்திரை : அனுகூலமான நாள். சுவாதி : நுட்பங்களை அறிவீர்கள். விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும்.

8 /12

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உங்களைப் பற்றிய புதுவிதமான புரிதல்கள் ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும். அனுஷம் : செலவுகள் ஏற்படும். கேட்டை : புரிதல்கள் ஏற்படும்.

9 /12

வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் காணப்படும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மூலம் : பொறுமை வேண்டும். பூராடம் :  அனுசரித்துச் செல்லவும். உத்திராடம் : நெருக்கடியான நாள்.

10 /12

மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். தாயாரிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும். சிக்கனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : ஒத்துழைப்பான நாள். திருவோணம் : வேறுபாடுகள் குறையும். அவிட்டம் : புரிதல்கள் உண்டாகும்.

11 /12

சூழ்நிலை அறிந்து செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உறவுகள் மத்தியில் மதிப்புகள் உயரும். அரசு பணியில் இருந்துவந்த இழுபறிவுகள் மறையும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். நிம்மதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் அவிட்டம் : மதிப்புகள் உயரும். சதயம் : முக்கியத்துவம் அதிகரிக்கும். பூரட்டாதி :  சிந்தித்துச் செயல்படவும்.

12 /12

இனம் புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் சோர்வுகள் உண்டாகும். நுட்பமான சில விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்கள் வழியில் அலைச்சலும் அனுகூலமும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.   அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் பூரட்டாதி : சோர்வான நாள். உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும். ரேவதி : ஆரோக்கியத்தில் கவனம்