400 Day FD Schemes: பாங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளின் 400 நாள்களுக்கான FD திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்தால், எவ்வளவு வருவாய் கிடைக்கும். எதில் வட்டி அதிகம் என்பதை இங்கு காணலாம்.
Fixed Deposits Scheme: நிலையான வைப்புத்தொகை திட்டம் குறுகிய கால முதலீடு செய்பவர்களுக்கு நல்ல அம்சமாகும். 1 வருடம், 2 வருடம், 400 நாள்கள் என பல காலகட்டங்கள் கொண்ட திட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு வட்டி விகிதமும் வேறுபடும். அந்த வகையில், சாதாரண வாடிக்கையாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
முதலில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் BoB உத்சவ் திட்டத்தை பார்க்கலாம். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இந்த FD திட்டத்திற்கு 7.30% வட்டி விகிதமாக வழங்கப்படுகிறது. இது 400 நாள்கள் FD திட்டமாகும்.
இதில் நீங்கள் 2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 2,16,740 ரூபாயை 400 நாள்கள் முடிவில் பெறுவீர்கள். அதுவே, 4 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 4,33,479 ரூபாயை கடைசியில் பெறுவார்கள். அதுவே 6 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 6,50,219 ரூபாயை பெறலாம்.
இந்த பாங்க் ஆப் பரோடா உத்சவ் FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டி விகிதமாக வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் இதில் 2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 2,17,925 ரூபாயை 400 நாள்கள் முடிவில் பெறுவீர்கள். 4 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 4,35,850 ரூபாயை கடைசியில் பெறுவார்கள். 6 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 6,53,774 ரூபாயை பெறலாம்.
தற்போது பஞ்சாப் நேஷ்னல் வங்கி 400 நாள்களுக்கான நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் 7.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் இந்த FD திட்டத்தில் நீங்கள் 2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், 2,16,621 ரூபாயை பெறுவீர்கள். 4 லட்ச ரூபாயை போட்டால் 4,33,243 ரூபாயை பெறுவீர்கள். அதே நேரத்தில் 6 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 6,49,864 ரூபாயை பெறுவீர்கள்.
மூத்த குடிமக்களுக்கு பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 400 நாள் FD திட்டத்தில் 7.75% வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது.
இதில் நீங்கள் 2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், 2,17,806 ரூபாயை பெறுவீர்கள். 4 லட்ச ரூபாயை போட்டால் 4,35,612 ரூபாயை பெறுவீர்கள். அதே நேரத்தில் 6 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 6,53,418 ரூபாயை பெறுவீர்கள்.