இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.
நேற்று (பிப்.09) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்தார். ஒரு வருடங்களுக்கு பின்னர் சதம் அடித்த ரோகித் சர்மா, இதன் மூலம் தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். அந்த பட்டியலை இங்கு பார்ப்போம்.
ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,987 ரன்களுடன் ராகுல் டிராவிட்டை முந்தி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த 10 வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். ராகுல் டிராவிட் 10,889 ரன்கள் அடித்த நிலையில், தற்போது அதை ரோகித் சர்மா முந்தி உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். இவர் 22 சதங்களுடன் 11,363 ரன்களை ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் ஜாம்பாவான் ஜாக் காலிஸ் 17 சதங்களுடன் 11,579 ரன்களுடன் இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் இன்சமாம் உல் ஹக் இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 11,739 ரன்கள் விளாசி உள்ளார்.
இலங்கை அணியின் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் மஹேல ஜெயவர்தன 19 சதங்களுடன் 12,650 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
இலங்கை அணியின் ஜாம்பாவான் சனத் ஜெயசூர்யா ஒருநாள் போட்டிகளில் 13,430 ரன்களை விளாசி உள்ளார். பேட்டிங்கில் இவரது அச்சமற்ற அணுகுமுறை 28 சதங்கள் மற்றும் 270 சிக்சர்களுக்கு வழிவகுத்தது.
ஆஸ்திரேலியா அணியின் பெற்காலத்திற்கு முக்கிய தூணாக இருந்தவர் ரிக்கி பாண்டிங். இவர் 30 ஒருநாள் சதங்களுடன் 13,704 ரன்களை அடித்து இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
நவீன கால கிரிக்கெட் மாஸ்டராக திகழ்பவர் விராட் கோலி. இவர் 57.96 ஸ்டைக் ரேட்டுடன் 13,911 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடித்துள்ளார்.
404 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய குமார் சங்கக்கார ஒருநாள் போட்டிகளில் 14,234 ரன்களை எடுத்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள் மற்றும் 93 அரை சதங்களை விளாசி இருக்கிறார்.
கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படுபவர் இந்திய அணியின் ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கர். இவர் 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் நிகழ்த்திய சாதனைகளில் எட்ட முடியாத சாதனையாகள் பல உள்ளன. அதில் இந்த சாதனையும் ஒன்று.