மத்திய அரசு PM Awas Yojana திட்டத்தின் கீழ் புது வீடு கட்ட எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
PM Awas Yojana திட்டத்தின் கீழ் 40 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புது வீடு கட்டும் திட்டத்தில் இருப்பவர்கள் மத்திய அரசின் PM Awas Yojana திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். சுமார் 40 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதால், இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பிஎம் அவாஸ் யோஜனா (PM Awas Yojana) திட்டத்துக்கு மொபைல் வழியாகவே விண்ணப்பிக்கலாம்.
இப்போது வரை, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)-க்கான விண்ணப்பங்களை ஆஃப்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். இருப்பினும், ஒரு புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மக்கள் இப்போது ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு ‘Awas Plus 2024’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
‘Awas Plus 2024’ செயலி கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. பயனர்கள் அதை அதிகாரப்பூர்வ பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலியைப் பதிவிறக்கிய பிறகு, விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப செயல்முறையைச் சரிபார்க்கவும். பின்னர் திட்ட விதிகளைப் படிக்கவும். பயனாளிகளின் பட்டியலைப் பார்க்கவும்.
விண்ணப்பதாரர்கள் தேவையான தகவல்களையும் ஆவணங்களையும் செயலி மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதி உதவி பெறுவார்கள்.
PMAY விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்கள் | விண்ணப்பம் நிராகரிப்பதை தவிர்க்க, தேவையான அனைத்து ஆவணங்களையும் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். முறையான ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள் | ஆதார் அட்டை மற்றும் வருமானச் சான்று, குடியிருப்பு முகவரிச் சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், சமீபத்திய இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், பிறப்புச் சான்றிதழ்
pmayg.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் 'PMAY-U 2.0 என்ற ஆப்சனை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும்.