Director Siva Next Movie After Kanguva : கடந்த ஆண்டு வெளியாகி தோல்வியை தழுவிய கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் இயக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Director Siva Next Movie After Kanguva : பெரிய பட்ஜெட்டில் உருவாகி, ரிலீஸிற்கு பின் பெரும் தோல்வியை தழுவிய படம், கங்குவா. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த தோல்வி, சூர்யாவை பாதித்ததோ இல்லையோ, அப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவை பெருமளவில் பாதித்ததாக கூறப்படுகிறது. இவர், அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோ குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. அந்த ஹீரோ அஜித்தாக இருப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேறு ஒருவரின் பெயர்தான் கிசுகிசுவில் அடிபடுகிறது. அவர் யார் தெரியுமா?
பெரிய பட்ஜெட்டில் 2 ஆண்டுகளுக்கும் மேல் உருவான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருந்தார்.
படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ப்ரமோஷனில் வீணாக படத்திற்கு பெரிய பில்ட்-அப் கொடுத்ததால், ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், படம் வெளியான பின்பு முதல் ஷோவில் இருந்தே நெகடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. இதனால் படம் சில நாட்களே தியேட்டர்களில் ஓடியது.
கங்குவா படத்திற்கு பிறகு, சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்திலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 படத்திலும் கமிட் ஆகிவிட்டார். ஆனால் சிவாவின் மார்கெட் பெரிதாக சறுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா, கங்குவா படத்தை அடுத்து அஜித்துடன் கைக்கோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர்கள் ஏற்கனவே இணைந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கின்றனர்.
அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியானது, இதையடுத்து குட் பேட் அக்லி படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த இரு படங்களை அடுத்து அஜித் சிவாவுடன் கைக்கோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவா தன் படத்திற்கு ஹீரோவாக வேறு ஒருவரை செலக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த ஹீரோ வேறு யாருமில்லை, விஜய் சேதுபதிதான்! இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு கோயிலுக்கு சென்றாதாகவும் அங்கு அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் வெகு விரைவில் இணைந்து நடிக்கும் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.