Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படும் விவரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தில் புதிய பயனாளிகள் எப்போது சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த தொகை பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகவும் வரவு வைக்கப்படுகிறது.
இதனால் பெண்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த திட்டத்தில் புதிய பயனாளிகள் எப்போது சேர்க்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுகுறித்த அப்டேட் இப்போது கிடைத்திருக்கிறது.
அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) விரிவாக்கம் செய்யப்படும் என்றார். அதில் தகுதியான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழக்கப்படும் என தெரிவித்தார்.
ஆனால், எப்போது புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்ற விவரம் வெளியாகாமல் இருந்தது. அது குறித்து இப்போது ஒரு சூப்பரான தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியில்லாமல் சேர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் மாதம்தோறும் ஆய்வு செய்யப்பட்டு நீக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதிய பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மற்றும் புதிதாக விண்ணிப்பபவர்கள் என எல்லோருடைய விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அண்மையில் தான் புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடங்கியது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த நிலையில், அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் புதிய கார்டுகள் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவர்களும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.
புதிய ரேஷன் கார்டு விநியோகம் முடிந்ததும், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கும். அந்த வகையில் பார்க்கும்போது தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
அதன்பிறகு பயனாளிகள் தேர்வு முடிந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குப் பிறகு புதிய பயனாளிகளுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இதுதான் இப்போதை சூடான லேட்டஸ்ட் அப்டேட் ஆகும்.