கார் ரேஸில் பிசியாக இருக்கும் அஜித் அடுத்ததாக அவரது 64வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான இயக்குனர் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக 2023ம் ஆண்டு துணிவு படம் வெளியானது. அதன் பிறகு சமீபத்தில் தான் விடாமுயற்சி படம் வெளியானது.
மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதால் தாமதமானது. விடாமுயற்சி படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்பதால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'குட் பேட் அக்லி' படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
அஜித்தின் 64-வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. விஷ்ணு வர்தன் மற்றும் சிவா இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.