Valentines Day 2025 Movies Re Releasing On Feb 14th: வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, இந்த நாளில் சில தமிழ் படங்கள், ஒரு சில தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Valentines Day 2025 Movies Re Releasing On Feb 14th: உலகளவில் பலரால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது, காதலர் தினம். இந்த பிப்ரவரி 14ஆம் தேதி இதை கொண்டாடும் வகையில் சில ஹிட் அடித்த காதல் படங்கள் மீண்டும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த காதலர் தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற தமிழ் காதல் திரைப்படங்கள், சில தியேட்டர்களில் மட்டும் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்போம்.
உலகில் பல லட்சம் பேரால் கொண்டாடப்படும் நாள், காதலர் தினம். இந்த நாளில், சில தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன.
சிம்பு-த்ரிஷா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம், விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார்.
இந்த படம், எப்போதும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாவது வழக்கம். அந்த வகையில், இப்போதும் இது வெளியாகி இருக்கிறது.
2006ஆம் ஆண்டில் ஜோதிகா-சூர்யா நடிப்பில் வெளியான படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் சூர்யா கௌதம் எனும் கதாப்பாத்திரத்திலும் ஜோதிகா குந்தவி எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
மாதவன், ரீமாசென், அபாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் மின்னலே. இதுவும் கௌதம் மேனன் படம்தான்.
இந்த படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு தியேட்டர்களில் பார்க்கலாம் எனக்கூறப்படுகிறது.