Budhan Peyarchi Palangal: இன்று புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budhan Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபப்டுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கிரகங்களின் இளவரசரான புதன் பிப்ரவரி 11 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆவார். பிப்ரவரி 11 ஆம் தேதி மதியம் 12:58 மணிக்கு புதன் கும்ப ராசிக்குச் செல்கிறார். இதன் காரணமாக கும்பத்தில் புதன் மற்றும் சனியின் சேர்க்கை நடக்கும்.
புதன் பிர்பவரி 11, அதாவது இன்று கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது இந்த மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் வெற்றி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இந்த பெயர்ச்சி காரணமாக, மேஷ ராசிக்காரர்களின் பேச்சு துல்லியமானதாகவும் தெளிவான சிந்தனையுடனும் இருக்கும். இந்த நேரத்தில், புதன் மற்றும் சனியின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நன்மைகளைத் தரும், அவர்கள் வெற்றியைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் விநாயகப் பெருமானை வணங்கி, அவரது மந்திரங்களை சொல்வது நல்லது.
ரிஷபம்: புதன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். நிலையான பண வரவு இருக்கும்.
மிதுனம்: கும்ப ராசியில் புதந் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். குறிப்பாக நிர்வாகம் மற்றும் முடிவெடுக்கும் பொறுப்பில் இருப்பார்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். குறுகிய மற்றும் வெற்றிகரமான வணிகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. அவை மிதுன ராசிக்காரர்களுக்கு லாபத்தையும் வெற்றியையும் தரும். விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு கவசம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.
கன்னி: புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்: கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு குழந்தைகளால் நிதி நன்மைகளும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்கள் பகுப்பாய்வு செய்யும் தன்மை நன்மைகளைத் தரும்.விநாயகர் மந்திரங்களையும் விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் சொல்வது நல்லது.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் நன்மை பயக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தை பயனுள்ள மற்றும் கூட்டு மூலோபாய திட்டங்களை உருவாக்க பயன்படுத்திக் கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும். இந்த நேரம் உங்கள் வாழ்க்கைக்கு மிக நல்லதாக இருக்கும்.
தனுசு: கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீக வளர்ச்சிக்கான நேரம் இது. இந்த நேரத்தில், தனுசு ராசிக்காரர்கள் பேச்சாற்றல், தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் பயனுள்ள பதவி உயர்வு மூலம் நன்மைகளைப் பெறலாம். பண வரவு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கும்பம்: கும்ப ராசியில்தான் புதன் பெயர்ச்சியாகவுள்ளார். ஆகையால் இவர்களுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும். கும்ப ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் லாபத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.