‘ஜன நாயகன்’ படத்தில் இணைந்த 39 வயது நடிகை!! விஜய்யுடன் ஏற்கனவே நடித்தவர்-யார் தெரியுமா?

Actress Shruti Haasan Joins Jana Nayagan : விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம், ஜன நாயகன். இந்த படத்தில், புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Actress Shruti Haasan Joins Jana Nayagan : அரசியலில் முழு நேரமாக களமிறங்குவதற்கு முன்பு, விஜய் நடித்து வரும் கடைசி படம், ஜன நாயகன். இது, இவரின் 69வது படமாகும். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க-விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இந்த படத்தில் ஏற்கனவே பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த சமயத்தில், புதிதாக இன்னொரு பிரபல நடிகை இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 /8

தளபதி 69 திரைப்படம், விஜய்யின் கடைசி படமாகும். இந்த படத்திற்கு சமீபத்தில் ஜன நாயகன் என பெயர் வைக்கப்பட்டது. ஹெச்.வினோத் முதன்முறையாக இந்த படம் மூலம் விஜய்யுடன் கைக்கோர்த்திருக்கிறார்.

2 /8

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மலையாள நடிகை மமிதா பைஜுவும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

3 /8

பாபி டியோ இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார், கூடவே நரேன் பிரியாமணி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

4 /8

ஜன நாயகன் படத்தின் டைட்டிலும், ‘நான் ஆணையிட்டால்’ போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

5 /8

ஜன நாயகன் படத்தில், புதிதாக ஒரு பிரபல நடிகை இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தவர்.

6 /8

அந்த நடிகை வேறு யாருமில்லை, ஸ்ருதி ஹாசன்தான். கமல்ஹாசனின் மகளான இவர் நடிகையாக மட்டுமன்றி பாடகியாகவும் வலம் வருகிறார்.

7 /8

ஜன நாயகன் படத்தில் ஸ்ருதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர், விஜய்க்கு இன்னொரு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்கிறாரா என்பது தெரியவில்லை. 

8 /8

இவர்கள் இருவரும் ஏற்கனவே 2015ல் வெளியான புலி படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.