Top Indian States With High Technology Development : இந்திய மாநிலங்கள் தற்போது டெக்னாலஜி துறையில் அதிக முன்னேற்றத்தை பெற்று வருகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Top Indian States With High Technology Development : இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்கள் டெக் துறையில் முன்னேறி வருகின்றன. ஐடி துறை வளர்ச்சி உள்பட பலவித தொழில்நுப்ட முன்னேற்றங்களுக்கு முன்னோடிகளாக இந்தியாவின் சில மாநிலங்கள் விளங்குகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாமா?
கர்நாடகாவின் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியாவின் Silicon Valley என அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு இன்ஃபோசிஸ், விப்ரோ, TCS போன்ற பெரிய ஐடி நிறுவனங்களும், இச்ரோவின் ஆராய்ச்சி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
ஐதராபாத்தில் கூகுள், மைக்ரோசாஃப், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்ரன. ஸ்டார்ட் அப் டெக் நிறுவனங்களும் இங்கு தொடங்கப்படுகின்றன.
மகாராஷ்ட்ராவின் தலைநகரான மும்பையிலும் புனேவிலும் டெக் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இது, அந்த மாநிலங்களின் வருமானத்தை உயர்த்தும் துறைகளாகவும் இருக்கின்றன.
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் டிஜிட்டல் ஃபைனான்ஸ் துறைகள் உள்பட பலவித ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சில வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகமும் இங்குதான் உள்ளது.
குஜராத்தில் செழிப்பான ஃபின்டெக் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் இருக்கின்றன, GIFT சிட்டி பிளாக்செயின் மற்றும் டிஜிட்டல் துறையில் இந்த இடம் முன்னிலையில் உள்ளது.
டெல்லியின் நொய்டா மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் AI,Start Up நிறுவனங்களுக்கு வளர்ச்சி தரும் இடங்கள் செயல்பட்டு வருகின்றன. சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனங்களும் அதிகளவில் இங்கு இயங்குகின்றன.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் AI, Blockchain உள்ளிட்டவற்றை மேம்படுத்த அரசுத்துறையே சில முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன. இதனால் இந்தியாவின் டெக் துறை முன்னேற்றத்திற்கு உதவும் மாநிலமாக இதுவும் விளங்குகிறது.