Saturn Transit | சனி பகவான் நகர்வு காரணமாக மகா சிவராத்திரி இரவில் இருந்து மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
Saturn and Mercury Transit | சனி மற்றும் புதன் கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் மகா சிவராத்திரியில் இருந்து மூன்று ராசிகளுக்கு செல்வத்தையும் அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது.
மகாசிவராத்திரி இரவில் சனி மற்றும் புதன் கிரகங்களின் நகர்வில் மிகப்பெரிய மாற்றம் இருக்கப்போகிறது. சனி கும்ப ராசியிலும், புதன் மீன ராசியிலும் அமர உள்ளன. இதனால் ரிஷபம், மிதுனம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் எல்லாம் கிடைக்கப்போகிறது.
ரிஷபம் | புதன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து வருமான ஸ்தானத்தை பார்க்கப்போகிறார். சனி கர்ம பாவ ஸ்தானத்தை பார்ப்பார். இந்த இரண்டு கிரகங்களின் பார்வை உங்களின் நிதி நிலமையை மேம்படுத்தும். இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், முதலீட்டிற்கு ஏற்ற நேரம் இது. இந்த நேரத்தில், உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கலாம். மேலும், புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். இந்த நேரத்தில், ஒரு பெரிய வணிக ஒப்பந்தம் நடக்கலாம்.
மிதுனம் | சனி பகவான் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாவது வீட்டில் அமரப்போகிறார். தொழில் மற்றும் வணிகத்தின் இடத்தில் புதன் கிரகம் அமரும். எனவே, இந்த நேரத்தில், உங்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் பணியிடத்தில் பாராட்டப்படும்.
மேலும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தொழில் ரீதியான பயணங்கள் நன்மை பயக்கும். பணத்தை கவனமாக முதலீடு செய்வது நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதே நேரத்தில், பணத்தைச் சேமிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
கும்பம் | சனி பகவான் உங்கள் ராசியின் லக்ன வீட்டில் அஸ்தமிக்கப் போகிறார். மேலும், புதன் கிரகம் உங்கள் ராசியிலிருந்து செல்வம் மற்றும் பேச்சு ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி அடையும். எனவே, இந்த காலகட்டத்தில், நீங்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம்.
மேலும் உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் நிலவும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் வருமான அதிகரிப்புக்கான வாய்ப்புகள் உள்ளன, இது உங்களின் நிதி நிலை வலுப்படும். மேலும், இந்த நேரத்தில் வணிகர்கள் நல்ல லாபங்களைப் பெறலாம்.