CPENGRAMS | ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

Govt Pensioners Latest News In Tamil: ஓய்வூதியதாரர்களின் குறைகள் மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை போட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது

Pensioners Grievances Latest News: ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன பார்ப்போம்.

 

1 /9

ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு | ஓய்வூதியம் வாங்கக்கூடிய அரசு பென்ஷனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல். முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுக்குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள். 

2 /9

CPENGRAMS என்றால் என்ன? | CPENGRAMS எனப்படும், மையப்படுதப்பட்ட ஓய்வூதிய குறைகள் நிவர்த்தி மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளத்தை மத்திய அரசு சமீபத்தில் மறு ஆய்வு செய்தது. அதன்பிறகு ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைவாகவும், திறமையாகவும் தீர்ப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

3 /9

ஓய்வூதியதாரர்களின் குறைகளை எத்தனை நாட்களில் தீர்க்க வேண்டும்? | புதிய வழிகாட்டுதல் அடிப்படையில், ஓய்வூதியதாரர்களின் குறைகளை 21 நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய அமைச்சகங்கள் முயற்சி செய்ய வேண்டும். குறைகளை தீர்க்க அதிக நேரம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இணையதளத்தில் இடைக்கால பதில் அளிக்க வேண்டும்.

4 /9

ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு முன்னுரிமை | ஓய்வூதியதாரர்களின் புகார் மற்றும் குறைகள் அரசு அணிகுமுறையின் கீழ் தீர்க்கப்பட வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இது எங்கள் அலுவலகத்துடன் தொடர்புடையது அல்ல, வேற டிபார்ட்மெண்ட் எனக்கூறி ஓய்வூதியதாரர்களின் குறைகளை உடனடியாக சுருக்கமாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது.

5 /9

ஓய்வூதியர் குறைகள் குறித்து அறிக்கை | ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காணும் போது, அதற்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற அறிக்கையையும் இணைக்கப்பட வேண்டும்.

6 /9

மாதம் தோறும் மதிப்பாய்வு கட்டாயம் | இணையதளத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் தொடர்பான குறைகளை அமைச்சகங்கள் மாதம் தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

7 /9

குறைதீர் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும் | அதுமட்டுமில்லாமல் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரமான முறையில் தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரம் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து குறைதீர் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.

8 /9

ஓய்வூதியர் மேல்முறையீடு மனு | குறை தீர்க்கப்பட்ட 30 நாட்களுக்குள், அதை எதிர்த்து மனுதாரர் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். அதேநேரத்தில் குறை தீர்க்க மேற்கொண்ட நடவடிக்கை தொடர்புடைய ஆவணங்கள் இருந்தால் அதனுடன் இணைக்க வேண்டும்.

9 /9

குறைதீர்ப்பு விண்ணப்பங்கள் | மேலும் அமைச்சகத்தில் நேரடியாக வழங்கப்பட்ட குறைதீர்ப்பு விண்ணப்பங்களை "CPENGRAMS" எனப்படும் ஓய்வூதிய மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.