Kerala Ragging Case: கொச்சியில் 15 வயது பள்ளி மாணவர் ஒருவர் மன உளச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பள்ளியில் பிற மாணவர்கள், அந்த மாணவனை மிகவும் கொடுமைப்படுத்தியதால்தான் தனது மகன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான் என அவரது தாயார் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது. தற்போது இதன் தீவிரம் அடங்குவதற்குள், கல்லூரி ஒன்றில் நடந்த கொடூரமான ராகிங் சம்பவம் ஒன்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Kerala Ragging Case: பிறப்புறுப்பில் டம்பிள்ஸ்...
கோட்டயத்தில் உள்ள அரசு நர்ஸிங் கல்லூரியில் கடந்த மூன்று மாதமாக, 5 சீனியர் மாணவர்கள் இணைந்து ஜூனியர் மாணவர்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். ஜுனியர் மாணவர்களின் உடைகளை அவிழ்த்து, அவர்களின் பிறப்புறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு, ஜாமெண்ட்ரி பாக்ஸில் உள்ள காம்ப்ஸை வைத்து குத்துவது என பல கொடுமைகளை செய்துள்ளனர்.
மேலும் படிக்க | படத்தில் கமிட் ஆன கும்பமேளா வைரல் பெண்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Kerala Ragging Case: 5 சீனியர் மாணவர்கள் கைது
அந்த கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் 5 சீனியர்கள் மீது 3 முதலாமாண்டு மாணவர்கள் கோட்டயம் காந்திநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் 3 மாதங்களாக அந்த 5 மாணவர்களும் சேர்ந்து தங்களை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்துவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து அந்த 5 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்த நிலையில், அவர்கள் அனைவரையும் ராகிங் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
Kerala Ragging Case: சீனியர் மாணவர்களின் கொடூரச் செயல்
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, சீனியர் மாணவர்கள், ஜுனியர் மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து அவர்களின் பிறப்புறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். ஜாமிண்ட்ரி பாக்ஸில் உள்ள காம்பஸ் மற்றும் சில கூர்மையான பொருள்களை கொண்டு அவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த கொடுமை அதோடு நிற்கவில்லை. அவர்களுக்கு மேலும் வலியை ஏற்படுத்தும் வகையில் காயங்களில் சில கிரீம்களை தடவி உள்ளனர். வலியால் துடித்து காயமடைந்த மாணவர்கள் கூச்சலிட்டபோது, அந்த கிரீம்களை அவர்களின் வாயிலும் திணித்துள்ளனர். இந்த கொடூரச் செயல்களை அந்த சீனியர் மாணவர்கள் வீடியோ எடுத்தது மட்டுமின்றி, வேறு யாரிடமாவது இதுகுறித்து கூறினால் இதனை பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடுவோம் என்றும் மிரட்டியிருக்கின்றனர்.
Kerala Ragging Case: ஜுனியர்களுக்கு மிரட்டல்
ஞாயிற்றுக்கிழமையில் ஜுனியர் மாணவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து மதுபானம் அருந்தியதாக புகார் குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் தர மறுப்போரை அவர்கள் தாக்கி உள்ளனர். இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் ஒரு மாணவர் தனது தந்தையிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்தே இந்த விஷயம் போலீசாரிடம் வந்துள்ளது. தற்போது அந்த 5 சீனியர் மாணவர்களும் போலீசாரின் விசாரணையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் படிக்க | டான்ஸ் ஆடும் போது உயிரிழந்த 23 வயது பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ