தென்னிந்தியாவின் பிரபலமான நடிகரான கமல்ஹாசன் பிசியான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் AI தொழில் நுட்பத்துறையில் படிப்பதற்காக வெளி நாட்டிற்குச் சென்று கடந்த மாதத்தில் சென்னை திரும்பினார். பல புதுப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ள நிலையில் சதிலீலாவதி திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து சிறப்புக் கண்ணோட்டம் பார்ப்போம்.
கமல்ஹாசன் தமிழ் திரைத்துறையில் பிரம்மாண்டமான படங்களில் நடித்து அசத்தலான ஹிட்டை இன்றும் பெற்றுவருகிறார். இந்தியன் 2 எதிர்பார்க்காத தோல்வியைத் தழுவினாலும். அடுத்து வெளியாகவிருக்கும் தக் லைஃப் படத்தில் மாஸாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அதிலீலாவதி ஏதோ ஒரு படத்திலிருந்து எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி இங்குத் தெளிவாகப் பார்ப்போம்.
கமல்ஹாசன் தற்போது பல புதுப்படங்கள் நடித்தாலும் பழைய கமல்ஹாசனை யாராலும் மறக்கமுடியாது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவரது தோற்றமும் நடிப்பும் அட்டகாசமாய் இருக்கும். குணா, மகா நதி, ஹோராம் உள்ளிட்ட பல சீரியஸான கதைகளில் கமல்ஹாசன் அற்புதமாக நடித்தது ரசிகர்கள் மனதில் இன்றும் வேரூன்றி இருக்கிறது.
சீரியஸான ஹீரோ முதல் காமெடி ஹீரோ வரை தன்னுடைய சிறப்பான நடிப்பை ரசிகர்களுக்கு தன்னுடைய வாழ் நாள் முழுவதும் கொடுத்துவருகிறார். கமல்ஹாசன் மும்பை, மதன காமராஜன், மைக்கெல், தெனாலி, பஞ்ச தந்திரம், காதலா காதலா மற்றும் அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவையாகவும் நடித்து ரசிகர்களை நெஞ்சில் இடம்பிடித்துள்ளார்.
சீரியஸான நடிகர் நகைச்சுவையாகவும் நடிக்கலாம் என்பது இலக்கணமாய் திகழ்ந்த மாபெரும் நடிகர் கமல்ஹாசன், பாலுமகேந்திராவின் இயக்கத்தில் சதிலீவாதி திரைப்படத்தில் நடித்தார்.
1990 வெளியான இப்படம் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கோவை சரளா, ரமேஷ், அரவிந்த், கல்பனா மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டது. இளையராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல் மேலும் பலமடங்கு வெற்றியை பெற்று தந்தது.
சதிலீலாவதி படத்தில் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பார். அந்த கணவனை மீட்க மனைவி என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் முக்கியக் கதை.இந்த கதை பெரிதாகப் பல படங்களிலும் எடுப்பார்கள். ஆனால் இப்படத்தின் இயக்குநர் இதனை வித்தியாசமாகவும் விரும்பிப்பார்க்கும்படியும் எடுத்துள்ளார். இது ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
இக்கதையை அனந்த் எழுத, மோகன் வசனம் எழுத, பாலுமகேந்திரா திரைக்கதை இயக்க மற்றும் கமல் நடிக்க அனைத்தும் நல்ல பொருத்தமான படத்தை உருவாக்கி ரசிகர்களுக்குக் கொடுத்தனர்.
கமல்ஹாசன் நம்பிக்கையைப் பிசிரில்லாமல் அழகாகக் கோவை சரளா இப்படத்தில் தன்னுடைய நடிப்பையும் நகைச்சுவை திறமையும் வழங்கினார். கிரேஸி மோகன் இப்படத்தில் தன்னுடைய வசனங்களால் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார்.
1989ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'She Devil'படத்தின் தழுவலாக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் சல்மான்கான், அனில் கபூர் இணைந்து இந்தி ரீமேக்கில் நடித்துள்ளனர். மீண்டும் கமல் மற்றும் அரவிந்த்சாமி இருவரும் இணைந்து கன்னடத்தில் இப்படத்தை ரீமேக் செய்து நடித்துள்ளனர்.