Actress Ramya Krishnan Monthly Income : பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனின் மாத வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Actress Ramya Krishnan Monthly Income : தமிழ் திரையுலகின் டாப் நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். கண்களாலேயே வில்லத்தனம் காட்டும் ரம்யா கிருஷ்ணன், இப்போது பாசமிகு தாயாக பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில், இவரது மாத வருமானம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவரது மாத வருமானம் ரூ.5 கோடியாக இருக்கிறதாம். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
நமக்கெல்லாம் நீலாம்பரியாக அறிமுகமானவர், ரம்யா கிருஷ்ணன். மிக இளம் வயதிலேயே சினிமாவிற்குள் வந்த நடிகைகளுள் இவரும் ஒருவர். காமெடி நடிகர் சோவின் உறவினரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணனை புகழின் உச்சியில் வைத்தது, படையப்பா படம். இந்த படத்தில் அவர் நடித்திருந்த நீலாம்பரி என்ற வில்லி கதாப்பாத்திரம் இன்று வரை பல இயக்குநர்களுக்கு வில்லி கேரக்டர் ஸ்கெட்சிற்கு உதவி புரிந்து வருகிறது.
இளமையாக இருந்த காலத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர், பின்னர் வில்லி கதாப்பாத்திரங்களுக்கு மாறினார். அதன் பிறகு சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
ரம்யா கிருஷ்ணன் கடந்த சில வருடங்களாக தாய் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில் பெரிய வெற்றியை தேடித்தந்த படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பிரபல நடிகர்களுக்கு தாயாக நடிக்கும் வாய்ப்பு அதிகரித்தது. இருப்பினும் இவர் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் எல்லாம் சம்பளம் வாங்குவதில்லை.
தற்போது ரம்யா கிருஷ்ணன் பெரிதாக படங்களில் நடிப்பதில்லை என்றாலும் அவர் சம்பாத்தியத்தில் குறையே இல்லை என கூறப்படுகிறது. இவரது மாத வருமானம் மட்டும் சுமார் ரூ.5 கோடி எனக்கூறப்படுகிறது.
ரம்யா கிருஷ்ணனுக்கு ஐதராபாத்தில் 3 நகைக்கடைஉம், கேரளாவில் 5 அழகு நிலையங்களும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இவருக்கு 5 கோடி வருமானம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடைசியாக கடந்த ஆண்டு 2 தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக சினிமாவில் தலைக்காட்டவில்லை.