Dragon vs NEEK : ஒரே நாளில் வெளியான 2 பட ட்ரைலர்கள்! எது நல்லா இருக்கு?

Dragon Vs NEEK Which Movie Trailer Is Good : தனுஷ் இயக்கியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலரும், பிரதீப் ரங்கநாதனின் ட்ராகன் பட டிரைலரும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இதில், ரசிகர்களுக்கு எந்த டிரைலர் ரொம்ப பிடித்திருக்கிறது?  

Written by - Yuvashree | Last Updated : Feb 11, 2025, 09:51 AM IST
  • ஒரே நாளில் வெளியான 2 பட டிரைலர்கள்!
  • NEEK vs ட்ராகன் படம்
  • இரண்டு ட்ரைலரில் எது நல்லாயிருக்கு?
Dragon vs NEEK : ஒரே நாளில் வெளியான 2 பட ட்ரைலர்கள்! எது நல்லா இருக்கு? title=

Dragon Vs NEEK Which Movie Trailer Is Good : கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை, இந்த 2025ஆம் ஆண்டு ஜாக்பாட் அடித்த ஆண்டாக மாறியிருக்கிறது. இந்த வருடத்தில், வெளியாக இருக்கும் முக்கியமான படங்களுள் ட்ராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களும் அடக்கம். இந்த இரு படங்களின் டிரைலர்களும் நேற்று ஒரே நாளில் வெளியாகின.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் டிரைலர்:

தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகனான பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இளசுகளின் காதலை சொல்லும் படமாக, இந்த படம் அமைந்திருக்கிறது.

அனேகா சுரேந்திரன், பிரியா வாரியர், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் காதலுக்கும் காதல் தோல்விக்கும் இடையே மாட்டிக்கொள்ளும் ஜோடியின் கதையை சொல்வது போல படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது. “இது ஒரு வழக்கமான காதல் கதைதான். ஜாலியா வாங்க-ஜாலிய போங்க” என்று டிரைலரில் பேசுகிறார், நடிகர் தனுஷ். எனவே, படம் அனைவரையும் மகிழ வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ராகன் படத்தின் டிரைலர்:

கோமாளி படத்தை இயக்கிய பிரபலமான பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கும் படம், ட்ராகன். இந்த படத்தை, ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் நடிக்கும் இந்த படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

வாழ்வில் உருப்படாமல் இருக்கும் இன்ஜினியர் இளைஞன், வாழ்வில் உடனே முன்னேற வேண்டுமென நினைக்கிறான். அவனை சுற்றி இருப்பவர்கள் காரி துப்புகின்றனர். இதனால், ஒரே ஒரு தப்பை செய்து விட்டு அவன் ஜெயிக்க நினைக்க, அதற்கு அருகில் இருப்பவர்களும் ஊக்கம் கொடுக்கின்றனர். கடைசியில் படத்தில் என்ன நடந்தது என்பதுதான், கதை. இதைத்தான் டிரைலரிலும் கூறியிருக்கின்றனர்.
இப்படத்தில் பிரதீப்பிற்கு ஜோடிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லாேகர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரபல யூடியூபரான விஜே சித்து, ஹர்ஷத் உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது கெளதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இரண்டில் எது நல்லாருக்கு?

ரசிகர்களை பொறுத்தவரை, இரு படங்களின் டிரைலருமே நன்றாக இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. தனுஷ் ஒரு பக்கம் காதல் கதையை கொஞ்சம் காமெடியாக எடுத்திருக்கிறார். அஷ்வத் மாரிமுத்து காமெடி கதையில் காெஞ்சம் காதலை தூவி எடுத்திருக்கிறார். இந்த இரு படங்களும், ஒரே மாதிரியான ஜானராக இருப்பதால், தியேட்டரில் டபுள் ட்ரீட் கன்ஃபார்ம் என்ற தககவல்கள் வைரலாகி வருகிறது. இரண்டுமே இளைஞர்களுக்கு பிடித்தவாறு இருக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டும் ரிலீஸாவது எப்போது?

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும், பிரதீப்பின் ட்ராகன் படமும், பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டு படங்களின் ரிலீஸும் தள்ளிப்போடப்பட்டது. இந்த இரு படங்களின் டிரைலரும் ஒரே நாளில் வெளியானதோடு மட்டுமன்றி, தியேட்டர் ரிலீஸும் ஒரே நாளில்தான் இருக்கிறது. வரும் பிப்ரவரி 21ஆம் தேதி, இந்த இரண்டு படங்களையும் திரையரங்குகளில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | GOAT vs Vidaamuyarchi: முதல் நாளில் எந்த படம் அதிக வசூல்? யார் ஓப்பனிங் கிங்?

மேலும் படிக்க | GOAT vs விடாமுயற்சி! ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News