கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் : தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய உண்மைகள்

Cervical cancer | கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து பெண்கள் கட்டாயம் நான்கு முக்கிய உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது உயிரிழப்பை தடுக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 9, 2025, 06:29 PM IST
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு
  • இந்த 4 விஷயங்களை பெண்கள் அறிந்து கொள்ளுங்கள்
  • புற்றுநோய் ஆபத்தில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் : தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய உண்மைகள் title=

Cervical cancer Awareness | கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது பெரும்பாலும் பெண்களை பாதிக்கும் மிகவும் பரவலாக இருக்கும் புற்றுநோய்களில் ஒன்று. இந்த நோய் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும. ஆனால் அதனை முன்கூட்டியே கண்டறிய முடியும். அப்போது சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும். எனவே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1. ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் இல்லாதபட்சத்தில், சில அசாதாரண மாற்றங்கள் தென்படும். உதாரணமாக, உடலுறவின் போது இரத்தப்போக்கு, இடுப்பு வலி இருந்தால் அவற்றை புறக்கணிக்க கூடாது. இந்த அறிகுறிகள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, அசாதாரண மாற்றங்களைப் பார்த்தால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

2. உங்கள் வாழ்க்கை முறை மாற்றம்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உங்கள் வாழ்க்கை முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவது மிக முக்கியம். புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். இதனால் உங்கள் உடல் HPV தொற்றுக்கு எதிராக போர் செய்ய முடியாது. அத்துடன் எப்போதும் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதும், பல பேருடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமான வழிமுறைகள் ஆகும்.

3. HPV எனப்படும் வைரஸ்

அனைத்து கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களுக்கும் HPB வைரஸ் தான் முக்கிய காரணம். இது பொதுவாக பாலியல் தொடர்பின் மூலம் பரவும் ஒரு தொற்றாகும். எனினும், எல்லா HPV தொற்றுகளும் புற்றுநோயை ஏற்படுத்தாது. சில வகையான HPV வைரஸ்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. HPV தடுப்பு தடுப்பூசி பெற்று, இந்த தொற்றுகளின் தாக்கத்தை குறைக்க முடியும்.

4. வழக்கமான பரிசோதனைகள்

திடீரென மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த நோயின் தாக்கத்தை முன்கூட்டியே கண்டறிய வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, பாப் ஸ்மியர் சோதனை அல்லது HPV சோதனை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முன்கூட்டிய அறிகுறிகளை கண்டறிய உதவும். 21 வயதிற்குப் பிறகு பெண்கள் இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது அவர்களின் உடல் நலத்துக்கு மிக முக்கியம். 

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய இந்த விஷயங்களை அனைவரும் தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுவது, அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் கொலஸ்ட்ரால் வரை... ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த பிரிஞ்சி இலை கை கொடுக்கும்

மேலும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் வரும் நுரையீரல் புற்றுநோய்... முக்கிய எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News