Follow 333 Mantra That Will Calm Your Mind : இந்த பரபரப்பான உலகுடன் சேர்ந்து நாமும் பரபரப்பாக வாழ்ந்து வருகிறோம். வேலையில் பிரஷர், வீட்டில் பிரஷர், நாம் இருக்கும் உறவுகளில் பிரஷர் என எங்கு பார்த்தாலும் நமக்கு ஏதோ ஒரு தலைவலி இருக்கும். இதனால் கொஞ்சநஞ்ச மன அமைதியும் சில மணி நேரங்களுக்கு மேல் நிலைப்பதில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் இப்படி இருக்க, நாம் மன அமைதியை சிம்பிளாக தேடுவது எப்படி? அதற்கு உதவுவதுதான் இந்த 3-3-3 மந்திரம்.
3 நிமிடம் கண்களை மூடுங்கள்..
இந்த மந்திரத்தின் முதல் படி, மூன்று நிமிடம் சிம்பிளாக கண்களை மூடி இருப்பதுதான். 24 மணி நேரத்தில் நாம் தூங்கும் நேரங்களை தவிர பிற நேரங்களில் நம் கண்கள் எத்தனையோ விஷயங்களை பார்க்கின்றன. நாள் முழுக்க instagram facebook போன்ற தளங்களில் ஸ்க்ரோல் செய்வது, வேலைக்காக லேப்டாப்பை நாள் முழுவதும் பார்ப்பது, சாலையில் நடந்து செல்லும் போது ஏதேனும் ஒரு விபத்து என நமது கண்கள் நாம் நினைப்பதை விட கடினமான விஷயங்களை பார்க்கின்றன. இவற்றிற்கு ரெஸ்ட் கொடுக்கும் வகையில், சில நிமிடங்கள் கண்களை மூடி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் எங்கு சௌகரியமாக உணர்கிறீர்களோ அங்கு அமர்ந்து கண்களை மூடி மூன்று நிமிடங்கள் இருக்கலாம். உங்களுக்கு பிசியான நாளில் பதற்றமோ அல்லது ஏதேனும் குழப்பமோ ஏற்பட்டால் இப்படி தனி அறைக்கு சென்று மூன்று நிமிடங்கள் கண்களை மூடி எதையும் பார்க்காமல் இருங்கள்.
3 நிமிட மூச்சுப் பயிற்சி…
மூன்று நிமிடங்கள் கண்களை மூடி தியான நிலைக்கு சென்றவுடன், சில நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யலாம். கண்களை மூடியவாறு அல்லது திறந்தவாறு செய்தாலும் சரி. இதை செய்ய ஐந்து வினாடிகள் மூக்கினால் மூச்சை இழுத்து விட்டு நான்கு வினாடிகள் அந்த மூச்சை அப்படியே நிறுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக ஐந்து வினாடிகளுக்கு வாய் வழியாக அந்த மூச்சை வெளியேற்ற வேண்டும். இப்படி 3 நிமிடத்தில் நீங்கள் 20-30 முறை வரை செய்யலாம்.
3 நிமிடம் பாசிட்டிவாக பேசுவது..
3-3-3 மேஜிக் மந்திரத்தில், மூன்றாவது ஸ்டெப், உங்களிடம் நீங்களே மூன்று நிமிடத்திற்கு பாசிட்டிவாக பேசுவது. நீங்கள் கண்களை மூடி தியான நிறைத்து சென்ற பிறகு, மூச்சுப் பயிற்சியும் அதன் பிறகு செய்ததால் உங்கள் மனம் மற்றும் உடல் சிறிதளவு ரிலாக்ஸாக இருக்கும். இந்து சமயத்தில், நீங்கள் உங்களிடம் சில நல்ல விஷயங்களை பேசினால் அது உங்கள் காதுகளை தாண்டி மனதையும் எட்டும். எந்த விஷயத்தில் ஜெயிக்க நினைக்கிறீர்களோ அது பற்றி மூன்று நிமிடத்திற்கு பாசிட்டிவாக பேசுங்கள். இந்த கடைசி மூன்று நிமிடங்கள் உங்களது மனநிலை எப்படி இருக்க வேண்டும், உங்களிடம் இருக்கும் ஆற்றல் எவ்வாறாக மாறும் என்பதை தீர்மானிக்கும். உதாரணத்திற்கு நான் மன உறுதியுடன் இருக்கிறேன், எது சரியோ அதை மட்டும் செய்கிறேன், நல்ல விஷயங்கள் என்னை தேடி வந்து கொண்டிருக்கின்றன என்பது போன்ற விஷயங்களை பேச வேண்டும்.
இது எப்படி உதவும்?
இந்த 3-3-3 மந்திரம், உங்கள் மனதையும் ஆன்மாவையும் சரியான வழியில் கொண்டு செல்ல உதவும். இது முதலில் கண்களுக்கான பயிற்சியாக விளங்குகிறது. கண்களை ரிலாக்ஸ் செய்து பின்பு உங்கள் மூச்சையும் சமநிலை செய்தவுடன் உங்கள் மனதை லைட் ஆக்குகிறது. அதன்பிறகு மனதில் இருக்கும் விஷயங்களை பாசிட்டிவாக பேச வைப்பதால், நீங்கள் மன அமைதிக்கான வழியை செல்வதோடு உங்களை சுற்றி இருக்கும் விஷயங்களும் உங்களுக்கு அமைதியை கொடுக்கும் வகையில் அமையும்.
இதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
அதிகாலையில் எந்த பயிற்சியை செய்வது நல்லது. காரணம் காலை வேளையில் அனைத்துமே அமைதியாக இருக்கும். உங்களை செய்யவும் சுற்றி யாரும் இருக்க மாட்டார்கள். இதை வேலைக்கு அல்லது கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் மாலை வேளையிலும் கூட செய்யலாம்.
மேலும் படிக்க | 2025ல் ஆழமான மன அமைதியை பெற சிம்பிளான 7 பயிற்சிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ