Who Will Be The Next Chief Minister In Delhi: டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி 36 இடங்களை எட்டியதால், காவி கட்சியின் முதல்வர் முகம் யார் என்பதில் கவனம் இப்போது திரும்பியுள்ளது. எனவே டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில் அக்கட்சி முதல்வர் பதவிக்கு யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் குறித்து விரிவாக பார்ப்போம்.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியது
இதுக்குறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், கட்சியின் முதல்வர் முகத்தை "மத்திய தலைமை" முடிவு செய்யும் என்று கூறினார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கலவையான முடிவுகளை அறிவித்தாலும், பெரும்பாலானவை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு பாஜக வெற்றி பெறும் என்று கணித்தன. சில கணிப்புகள் பாஜகவிற்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் எனக் கூறியிருந்தன.
டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்?
காங்கிரஸ் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டெல்லியை பொறுத்தவரை பாஜக 35 முதல் 49 இடங்களைப் பெறக்கூடும் என்றும், ஆம் ஆத்மி 21 முதல் 37 வரை வெல்லக்கூடும் என்றும், காங்கிரஸ் மூன்று இடங்கள் வரை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலவரப்படி டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற சூழல் அமைந்துள்ளது.
டெல்லி முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு?
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பாஜக பெற்றால், அக்கட்சி முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்வார்கள்? பாஜகவின் முதல்வர் முகமாக யார் இருப்பார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. டெல்லி முதல்வராக வாய்ப்பு இருக்கக்கூடியவர்கள் சில பாஜக தலைவர்களை குறித்து பார்ப்போம்.
பர்வேஷ் வர்மா
முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புது தில்லி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆரம்பகிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த பிறகு, தற்போது அவர் பின்தங்கியுள்ளார்.
ரமேஷ் பிதுரி
ஆம் ஆத்மி கட்சி பிதூரியை பாஜகவின் முதல்வர் முகமாக அறிவித்து, தேர்தல் பிரச்சாரங்களின் போது அவரை விவாதத்திற்கு அழைத்தது. பாஜகவின் விமர்சனத்திற்கு மட்டுமே உரியது. கட்சியின் முதல்வர் முகம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். டெல்லி முதல்வர் அதிஷிக்கு எதிராக பிதூரி கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். அவர் முன்னிலை வகிக்கிறார்.
கைலாஷ் கஹ்லோட்
பிஜ்வாசனில் போட்டியிடும் கைலாஷ் கஹ்லோட் பாஜகவின் மற்றொரு சாத்தியமான முதல்வர் வேட்பாளர் முகமாக உள்ளார். அவர் தற்போது அந்த தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
கபில் மிஸ்ரா
கரவால் நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கபில் மிஸ்ரா தனது தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். இவருக்கும் டெல்லி முதல்வராக வாய்ப்பு உள்ளது.
அரவிந்தர் சிங் லவ்லி
டெல்லி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான லவ்லி, டெல்லி தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு மாறிய பிறகு காந்தி நகரில் இருந்து பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இருப்பினும், தற்போது நிலவரப்படி அவர் பின்தங்கியுள்ளார்.
விஜேந்தர் குப்தா
டெல்லியில் கட்சி வெற்றி பெற்றால், பாஜக மூத்த தலைவராகா இருக்கும் இவர், முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராக உள்ளார். டெல்லி பாஜகவின் முன்னாள் தலைவரான அவர், ஆம் ஆத்மியின் ஆதிக்கம் இருந்தபோதிலும், 2015 மற்றும் 2020 இரண்டிலும் ரோஹிணி தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறார். டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் குப்தா பணியாற்றி உள்ளார். அவரது அனுபவமும், உறுதியும் அவரை கட்சியின் தலைமைத்துவக் கணக்கீடுகளில் ஒரு முக்கிய நபராக மாற்றியது.
2013 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை வென்ற பிறகு காங்கிரஸின் வெளிப்புற ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது. ஆனால் அந்த பதவிக்காலம் 49 நாட்கள் மட்டுமே நீடித்தது.
அதன்பிறகு நடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில், 70 இடங்களில் 67 இடங்களை வென்று அக்கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது. 2020 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. மீதமுள்ள எட்டு இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் மீண்டும் ஒரு இடத்தைக் கூட வெல்லத் தவறியது.
மேலும் படிக்க - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை நோக்கி திமுக? மேஜிக் செய்யுமா நாம் தமிழர் கட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ