திரைப்படங்கள், வெப் சீரிஸ் அல்லது டிவி சேனல்களைப் பார்க்க OTT சந்தா அல்லது கட்டணம் அதிகம் கொண்ட DTH ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்துபவர்களுக்கு இப்போது குட் நியூஸ் வந்துள்ளது. இப்போது நீங்கள் ஒரே இடத்தில் டிவி சேனல்கள் மற்றும் OTT செயலிகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள். ஸ்ட்ரீம் பாக்ஸ் மீடியா இந்தியாவில் டோர் பிளேயை அறிமுகப்படுத்தியது
OTT செயலிகளின் இலவச சந்தா
ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியாவின் டோர் ப்ளே ஆப் மூலம், 20க்கும் மேற்பட்ட OTT செயலிகளின் இலவச சந்தாவைப் பெறப் போகிறீர்கள். அதாவது, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், டிஸ்கவரி பிளஸ் போன்ற பல செயலிகளுக்கான சந்தாத் திட்டத்தை தனித்தனியாக எடுக்க வேண்டியதில்லை. இது மட்டுமின்றி, புதிய செயலியில் 300க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
பல OTT செயலிகள் இலவசம்
கடந்த ஆண்டு டிசம்பரில், நிறுவனம் இந்தியாவின் முதல் சந்தா அடிப்படையிலான தொலைக்காட்சி சேவையான Dor உடன் Dor TV OS மற்றும் 24 OTT பயன்பாடுகளுக்கான அணுகலை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் அதன் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Dor Play செயலியில், நீங்கள் Zee5, Disney+Hotstar, Sun Nxt, Sony LIV, Lionsgate Play, Fancode, Aha, Discovery+, ETV Win, Chaupal, Dollywood Play, Nammaflix, Sun NXT, ShemarooMe, Stage, Raj TV, TravelXP, VR OTT, Playflix, OTT Plus, DistroTV ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறலாம்.
புதிய பொழுதுபோக்கு புதுப்பிப்புகள்
இந்த செயலியில் பயனர்கள் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக, நிறுவனம் Trending மற்றும் Upcoming என்ற இரண்டு தனித்துவமான பிரிவுகளை வழங்கியுள்ளது. இந்த செயலியில் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த உள்ளடக்கத்தை ஒரே தேடலில் கண்டறிய உதவுகிறது. டோர் பிளேயின் இடைமுகம் மற்ற நிறுவனங்களின் செயலிகளை விட மிகவும் எளிதானது. இரண்டு தனித்துவமான பிரிவுகளைக் கொண்டிருப்பதால், புதிய பொழுதுபோக்கு புதுப்பிப்புகளும் கிடைக்கும்.
விருப்பத்தின் அடிப்படையிலான பில்டர் வசதி
நிறுவனம் டோர் செயலியில் பயனர்களுக்கு மனநிலை அடிப்படையிலான பில்டர்களை வழங்கியுள்ளது. உங்களுக்கு பிடித்த உள்ளடக்கத்தை இந்த பில்டர் ஆப்ஷன் காண்பிக்கும். இது மட்டுமின்றி, இந்த செயலியில் உங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் வகைகளை ஆராயும் வாய்ப்பும் கிடைக்கும். பில்டர் வசதி காரணமாக, உங்கள் ஆர்வத்தின் அடிப்படையிலான உள்ளடக்கத்தைக் கண்டறிவதில் உங்களுக்கு அதிக சிரமம் இருக்காது.
டோர் ப்ளே கட்டண விபரம்
நீங்கள் டோர் ப்ளேயின் சந்தாவைப் பெற விரும்பினால், அதன் 3 மாத கட்டணம் 400 ரூபாய்க்கும் குறைவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்த செயலியின் சந்தா ரூ.399 மட்டுமே. ரூ. 399 சந்தாவைப் பெறுவதன் மூலம், நீங்கள் 3 மாதங்களுக்கு செயலியை பயன்படுத்த முடியும். இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட்டில் இருந்து டோர் ப்ளே செயலியின் சந்தாவைப் பெறலாம். சந்தாவை வாங்கிய பிறகு, உங்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும், அதை நீங்கள் உங்கள் மொபைல் எண்ணுடன் ஆக்டிவேட் செய்ய முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரில் டோர் ப்ளே செயலியும் கிடைக்கிறது.
மேலும் படிக்க | Toll Tax: சுங்க கட்டணத்திற்கு பாஸ்.... வாகன உரிமையாளர்களுக்கு குட்நியூஸ்
மேலும் படிக்க | Reliance Jio Airfiber... 599 ரூபாயில் 1000 GBயுடன் 12 OTT சேனல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ