அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அந்நாட்டு அதிபர் டோனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இந்தியா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்கள் அமெரிக்க இராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்தனர். அவர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டபோது கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் வைராகி வந்தன. மேலும், அழைத்து வரப்பட்ட இந்தியர்களில் பலரை வேலை வாங்கித்தருவதாக கூறி முகவர்கள் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் படிங்க: செல்லும் வழியெங்கும் பிணங்கள்.. நாடு கடத்தப்பட்டவர்கள் பகிரும் சோக கதை!
மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற திட்டம்
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலையில், மேலும் 487 இந்தியர்களை அமெரிக்க அரசு வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலளர் விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை கண்ணியத்துடன் நடத்த வலியுறுத்தல்
இது குறித்து வெளியுறவுத்துறை செயலளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் இந்திய அரசு தொடர்ந்து தகவல் பரிமாற்றத்தில் இருந்து வருகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும், வெளியேற்றப்படும் இந்தியர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: சர்வதேச நிதியை நிறுத்திய டிரம்ப்.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ