அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ!

Vidaamuyarchi Review: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2025, 01:02 PM IST
  • இன்று வெளியான விடாமுயற்சி படம்.
  • ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
  • லைகா நிறுவனம் படத்தை தயாரித்து இருந்தது.
அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ! title=

அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. ஆனால் பின்னர் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ரம்யா, ஆரவ் ஆகியோர் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி அவ்ளோ தானா?

படத்தின் கதை

கணவன் மனைவியான அஜித் மற்றும் திரிஷா 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சில மனஸ்தாபங்களால் திரிஷா அஜித்தை விவாகரத்து செய்ய நினைக்கிறார். ஆனால் அஜித்திற்கு இதில் உடன்பாடு இல்லை. விவாகரத்து முடியும் வரை தனது அப்பா வீட்டில் இருப்பதற்காக திரிஷா புறப்படுகிறார்.  அப்போது நானே சாலை வழியாக கூட்டி செல்கிறேன் என்று கூறி, அஜித் மற்றும் திரிஷா இருவரும் காரில் கிளம்புகின்றனர். போகும் வழியில் திரிஷா காணாமல் போகிறார். அதன் பிறகு என்ன ஆனது? த்ரிஷாவை யார் கடத்தினார்கள்? இறுதியில் அஜித் அவரை கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதே விடாமுயற்சி படத்தின் கதை.

ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா

விடாமுயற்சி படத்தின் பணிகள் தொடங்கியதில் இருந்து இந்த படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று பேசப்பட்டு வந்தது. அதனை உண்மையாக்கும் விதமாக அந்த படத்தின் மைய கருவை எடுத்துக்கொண்டு சில காட்சிகளை மாற்றி அமைத்து எடுத்துள்ளனர். இயக்குனர் மகிழ் திருமேனியின் படம் என்று ஒரு இடத்தில் கூட விடாமுயற்சி படத்தை சொல்ல முடியவில்லை. ஒட்டுமொத்தமாக வேறு யாரோ ஒருவர் இயக்கியது போல் தான் தெரிந்தது. திரைக்கதை, வசனங்கள் என எதிலும் சுவாரசியம் இல்லாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை மெதுவாக நகர்கிறது இந்த விடாமுயற்சி.

அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பு

அஜித் மட்டும் த்ரிஷா தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார். திரிஷா ஒரு கட்டத்தில் படத்திலிருந்து காணாமல் போகிறார், அதன் பிறகு அஜித் தான் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் ஒரு சில இடங்களில் அஜித் ரசிக்க வைக்கிறார். படம் முழுக்கவே அடிவாங்கி, ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் வழக்கம் போல தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் இந்த படத்தில் அஜித் சற்று வேண்டா வெறுப்பாக நடித்தது போல் படம் பார்க்கும்போது தோன்றுகிறது.

இவர்களை தவிர வில்லனாக வரும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நன்றாகவே நடித்துள்ளனர். படம் முழுக்கவே ரன்னிங், சேசிங் என சாலையில் தான் நடக்கிறது. இவற்றை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். அனிருத் திசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வழக்கம் போல சிறப்பாக அமைந்துள்ளது, குறிப்பாக பின்னணி இசையில் நன்றாகவே ஒர்க் செய்துள்ளார். படத்தின் நீளமும் திரைக்கதையில் உள்ள சில குறைபாடுகளும் விடாமுயற்சியின் படத்தை சற்று கீழே தள்ளி உள்ளது. ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டதாக சொன்னாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த படம் எப்படி கனெக்ட் ஆகும் என்பது சந்தேகமே.

மேலும் படிக்க | GOAT vs விடாமுயற்சி! ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News