உடல் எடையை வேகமாக கரைக்க... காலை உணவில் எது பெஸ்ட்? பன்னீர் vs முட்டை!

Healthy Breakfast: உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பன்னீர் மற்றும் முட்டையில் எதை காலை உணவாக எடுத்துக்கொண்டால் சிறந்த பலன் இருக்கும் என்பதை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2025, 06:44 AM IST
  • இரண்டிலும் புரதச்சத்து நிறைந்திருக்கின்றன.
  • காலையில் புரதச்சத்து நிறைந்த உணவு அவசியம்.
  • இது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
உடல் எடையை வேகமாக கரைக்க... காலை உணவில் எது பெஸ்ட்? பன்னீர் vs முட்டை! title=

Healthy Breakfast, Weight Loss Tips: உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். அதில் மிக முக்கியமானது, உணவுப் பழக்கவழக்கம். காலை முதல் இரவு வரை நீங்கள் எந்த நேரத்தில், எந்த உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.

உடல் பருமன் பிரச்னை இருந்து, உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறீர்கள் எனில், காலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவை சாப்பிட வேண்டியது அவசியம். காலையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் நிறைய இருக்கின்றன. அதில் பன்னீரும், முட்டையும் நல்ல ஆப்ஷன்களாக இருக்கின்றன.

Healthy Breakfast: சிறந்த காலை உணவு முக்கியம்

பன்னீர் மற்றும் முட்டை இரண்டிலும் உடல் எடை குறைப்பதற்கான ஊட்டச்சத்து மற்றும் மிக முக்கியமாக புரதம் இருக்கிறது. புரதச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானம் ஆக நேரம் எடுக்கும். இதனால் உங்களின் வயிறு நிரம்பியே இருக்கும். தேவையில்லாமல் இடையிடையே சாப்பிட மாட்டீர்கள்.

மேலும், தசைகளை வலுவாக்குவதிலும் உங்களுக்கு கைக்கொடுக்கும். இந்த இரண்டையும் காலை உணவாக எடுத்துக்கொண்டால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும். இருப்பினும், இதில் எதை காலை உணவாக சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | வெயிட்லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... எலுமிச்சை - கிராம்பு தேநீர் செய்யும் மாயங்கள் பல

Healthy Breakfast: காலை உணவாக பன்னீர்

பன்னீரில் புரதச்சத்து நிறைந்திருப்பதால் நீடித்த ஆற்றலையும், தசைகளுக்கான ஊட்டத்தையும் கொடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில் இதை காலை உணவாக எடுத்துக்கொண்டால் மதிய உணவை வரை பெரியளவில் பசி எடுக்கவே எடுக்காது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகளும் இருப்பதால் உங்களுக்கு நீடித்த ஆற்றல் இருக்கும், ரத்த சர்க்கரை அளவு உயரவே உயராது. பன்னீரில் சாலட் செய்துகூட நீங்கள் காலை உணவாக சாப்பிடலாம்.

Healthy Breakfast: காலை உணவாக முட்டை

பன்னீரை விட விலை கம்மியானது. ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் தங்களின் ஊட்டச்சத்துக்கு பெரிதும் நம்பியிருப்பது முட்டையைதான். காலை உணவாக முட்டையை பல விதங்களில் எடுத்துக்கொள்ளலாம். அவித்த முட்டை, முட்டை பொரியல், ஆம்லேட், பிரெட் ஆம்லேட் போன்றவை நல்ல ஆப்ஷன்கள். குறைந்த கலோரியும், அதிக புரதமும், வைட்டமிண்களும், கனிமங்களும் இருப்பதால் உடல் எடையை குறைப்பதில் அதிகளவில் உதவும். இவை மூளை செயல்பாட்டுக்கும், நீடித்த ஆற்றலுக்கும் வழிவகுக்கும். வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும்.

Healthy Breakfast: பன்னீர் vs முட்டை

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பன்னீர் மற்றும் முட்டையில் எதை காலை உணவாக எடுத்துக்கொண்டால் சிறந்த பலன் கொடுக்கும் என்றால் இரண்டுமே என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே அளவிலான ஊட்டச்சத்துக்களை பன்னீரும், முட்டையும் தருகின்றன. இருப்பினும் விலை மற்றும் செய்வதற்கு எளிமையானது என்பதால் சிலர் முட்டையை தேர்வு செய்யலாம். இருப்பினும், வாரம் இருமுறை கூட பன்னீரையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். சைவ பிரியர்கள் முட்டைக்கு பதில் பருப்புகள், நட்ஸ், சோயா பொருள்களை எடுத்துக்கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும். இந்த கருத்துகளை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை ஓட ஓட விரட்டும் சூப்பர் உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News