8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த ஊதியக் குழுக்கள் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை ஃபிட்மென்ட் காரணி எனப்படும் மெட்ரிக்கைப் பயன்படுத்தி மதிப்பிடுகின்றன. பணவீக்க விகிதங்கள், வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கத்தின் நிதி ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் இந்த ஃபிட்மென்ட் காரணி தீர்மானிக்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோன்று, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் ஓய்வூதியத் தொகையும் இந்த ஊதியக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. 8வது ஊதியக் குழு ஜனவரி 2026ல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தற்போதைய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவரும் இந்த மாற்றங்களை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவை 7வது ஊதியக் குழுவின் நிபந்தனைகளின்படி கணக்கிடப்படுகின்றன.
ஃபிட்மென்ட் காரணி
ஃபிட்மென்ட் காரணிக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் விளைவாக, 8வது ஊதியக் குழுவை அமல்படுத்தியதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கணிசமான அளவில் பயனடைகின்றனர். 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் லெவல் 10 ஊழியர்களுக்கு, குறிப்பாக குரூப் ஏ என வகைப்படுத்தப்பட்ட பிரிவு அதிகாரி பதவிகளில் உள்ளவர்களுக்கு மாதச் சம்பளம் தோராயமாக ரூ. 1,60,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, ஸ்டெனோகிராபர்கள் மற்றும் ஜூனியர் கிளார்க்குகள் போன்ற பதவிகளை உள்ளடக்கிய கிரேடு D ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ. 25,500ல் இருந்து ரூ.72,930 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நிலை 5 ஊழியர்களுக்கு, பெரும்பாலும் மூத்த எழுத்தர்கள் போன்ற பணிகளில் உள்ளவர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 29,200ல் இருந்து ரூ. 83,512 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் பதவிகளில் பணியாற்றக்கூடிய நிலை 6 என வகைப்படுத்தப்பட்ட ஊழியர்களின் மாதச் சம்பளம் ரூ. 1 லட்சத்தைத் தாண்டும். இதேபோல், பிரிவு அதிகாரிகளாக செயல்படும் நிலை 8 ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.47,000 லிருந்து ரூ.1,36,000 ஆக உயரும். மேலும், நிலை 9 ஊழியர்களுக்கான மாதச் சம்பளம் ரூ. 53,000லிருந்து ரூ. 1,51,000 ஆக உயர்த்தப்பட உள்ளது.
மேலும் படிக்க | Post Office RD: ரூ. 8 லட்சம் வரை பெற... எத்தனை ஆண்டுகள், எவ்வளவு முதலீடு செய்யணும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ