பொதுவாக வளர்ப்பு பிராணிகளில் நாய்கள் நன்றியுள்ளவையாக பார்க்கப்படுகிறது. நாய்கள் பலருக்கும் பிடித்தமான விலங்குகள், அவை மனிதர்களுடன் பிணைப்பை உருவாக்குகின்றன. நாய்கள் தங்கள் அன்பான மற்றும் நட்பு இயல்புக்கு பெயர் பெற்றவை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவரிடமும் அரவணைப்பைக் காட்டுகின்றன. நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அல்லது சோகமாக இருந்தாலும் நாய்கள் நம்மை புரிந்து கொள்ளும் உணர்வு கொண்டவை. அவற்றுடன் நமது உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த விசுவாசமான உயிரினங்கள் பெரும்பாலும் நம் வீடுகளுக்கு முன்னால் அமர்ந்து, நன்றியுணர்வைக் காட்டுவது போல் காவலில் நிற்கின்றன.
மேலும் படிக்க | Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ், பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?
நாய்கள் ஏன் வாகனங்களை துரத்துகின்றன?
கார்கள் மற்றும் பைக்குகளை மட்டும் நாய்கள் ஏன் இவ்வளவு தீவிரத்துடன் துரத்துகின்றன என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். இரவில் வெளியில் சென்று வீடு திரும்பும் போது நாய்களை கண்டு அச்சப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இதனாலேயே இரவில் வெளியே செல்ல பயப்படுபவர்களும் நிறைய பேர் உள்ளனர். ஆனால் நாய்கள் ஏன் துரத்துகிறது என்பதையும், அவற்றின் உள்ளுணர்வு மற்றும் நடத்தைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாய்கள் கார்களை அல்லது பைக்குகளை துரத்தும்போது, அவை விளையாட்டாக இப்படி செய்வதாக சிலர் நினைக்கின்றனர். இருப்பினும், இது தவறான கருத்து என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
நாய்கள் சாலையைக் கடப்பதாலோ அல்லது வாகனங்களைத் துரத்திச் செல்வதனாலோ போக்குவரத்து விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இது நாய்கள் மற்றும் ஓட்டுநர்கள் இருவருக்கும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். வாகன ஓட்டிகள் திடீரென்று நாய்கள் துரத்துவதை பார்த்து வேகமாக செல்லும் போது எதிர்பாராத விபத்துகள் ஏற்படுகின்றன. நீங்கள் வேகமாக செல்ல செல்ல அவையும் வேகமாக துரத்தும். காரணம் வேகமாக வாகனத்தை இயக்கம் போது அதிக சத்தம் ஏற்படும். நாய்கள் இயல்பிலேயே வேட்டையாடும் குணம் கொண்டுள்ளன. எனவே அவற்றின் இரையைத் துரத்துவதை போல வாகனங்களை துரத்த ஆரம்பிக்கும்.
இதற்கான காரணம் என்ன?
நாய்கள் ஒரு அசாதாரண வாசனை உணர்வைக் கொண்டுள்ளன, இது அவர்களின் நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களின் டயர்களில் நாய்கள் சிறுநீர் கழிப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நாய்களின் சிறுநீரின் வாசனை டயர்களில் நீண்ட நேரம் இருக்கும். எனவே நீங்கள் சாலையில் செல்லும் போது, நாய்கள் இந்த வாசனையைக் கண்டால் மற்ற நாய்கள் அருகில் இருப்பதாக எண்ணி உங்கள் வாகனத்தை துரத்தலாம். பொதுவாக வேறு ஏரியாவில் இருந்து நாய் மற்றொரு ஏரியாவிற்கு வந்தால் அந்த பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டிவிடும். அவை பொதுவாக தங்கள் பகுதியில் அறிமுகமில்லாத நாய்கள் இருப்பதை விரும்புவதில்லை. எனவே தான் இவ்வாறு துரத்துகின்றன. அடுத்த முறை உங்களை நாய்கள் துரத்தினால் வேகமாக செல்லாமல் மெதுவாக அங்கிருந்து சென்றாலே துரத்துவதை நிறுத்த வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | IRDAI New Rules... மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் நிவாரணம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ