Ram Kapoor Reveals How He Lost Weight : தமிழில் மிகப் பிரபலமான ஹிந்தி டப்பிங் சீரியலாக இருந்தது, “உள்ளம் கொள்ளை போகுதடா”. இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தவர் ராம்கபூர். கதையின்படியும் சரி நிஜத்திலும் சரி, இவர் பார்ப்பதற்கு உடல் பருமனுடன் இருப்பார். இவர் நடித்த படங்களிலும் அப்படியேதான் நடித்திருப்பார். பல ஆண்டுகளாக உடல் எடை கூடி இருந்த இவர், சமீபத்தில் பாதி ஆளாக குறைந்து விட்டார். இதற்குக் காரணம், அவர் இருந்த டயட்டும் மேற்கொண்ட உடற்பயிற்சிகளும் தான். தனக்கு உடல் எடையை குறைக்க உதவிய விஷயங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.
டயட்:
உடல் எடையை குறைக்க தனது டயட் குறித்து பேசினார் ராம் கப்பூர். ஆனால் அந்த டயட் சில காலத்திற்கு தான் உதவும் என்றும் கூறினார். இதற்கு பதிலாக நமது மனநிலையை மாற்ற வேண்டும் என்றும், ஒருமுறை அந்த மனநிலையை கொண்டு வந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அதைதான் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
பிரித்து சாப்பிடுதல்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பிடுவதற்கு பதிலாக அதை பிரித்து 5-6 வேளைகளாக சாப்பிடுவர். ராமும் அதை பாலோ செய்து இருக்கிறார். ஆனால் இவர் அதிக வேளைகள் சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டு இருக்கிறார். காலை 10:30 மணிக்கு சாப்பிட்டால், அதோடு ஆறு முப்பது மணிக்கு தான் சாப்பிடுவாராம். சூரியன் மறைந்ததற்கு பிறகு எதை சாப்பிடுவதையும் தவிர்த்து விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். தண்ணீர் அல்லது காபி டீ வேண்டுமானால் குடித்துக் கொள்ளலாமாம். இதனை, intermittent fasting என ஆங்கிலத்தில் கூறுவர்.
உடல் எடை கூடி இருக்கும்போது இருந்த பிரச்சனைகள்!
ராம் அதிக உடல் எடையுடன் இருந்தபோது அவருக்கு டைப் 2 டயாபிடீஸ் இருந்ததாம். தான் குண்டாக இருக்கும்போது இந்த பிரச்சினையை தவிர வேறு எதுவும் தனக்கு இல்லை என்றும், ரசிகர்கள் கூட தான் குண்டாக இருந்ததால் தன்னை விரும்பியதாகவும் கூறியிருக்கிறார்.
நிலையான முயற்சி..
எந்த ஒரு விஷயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் அதற்கென்று நிலையான முயற்சிகள் மேற்கொள்வது அவசியம். உடல் எடையை குறைப்பதும் அப்படிதான். எடை குறைக்க நினைப்பவர்கள் பலர் ஜிம்மில் சேர்ந்து இரண்டு வாரத்திற்குள் பெரிய ரிசல்ட்டை எதிர்பார்ப்பார்கள். அப்படி எதுவும் இல்லை என தெரிந்தவுடன் ஜிம் போவதை நிறுத்தி விடுவார்கள். அப்படி செய்யாமல், மனதில் நம்பிக்கை வைத்து விடாமுயற்சியுடன் செய்யும் வேலையை திறந்து செய்ய வேண்டும் எனக் கூறுகிறார் ராம். அதேபோல, உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். இதற்கெல்லாம் நேரம் எடுக்கும் எனக் கூறும் அவர், அடிக்கடி செய்ய முடியும் இலக்குகளை மட்டும் வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்.
உடற்பயிற்சி:
ஒரு நாளில் இரண்டு வேளை மட்டும் சாப்பிட்ட ராம், காலை இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி, மற்றும் மாலை இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்தாராம். இப்படி டயட்டும் உடற்பயிற்சியும் ஒரே சமநிலையில் இருந்ததால் அவரால் உடல் எடையை குறைக்க முடிந்ததாக கூறயிருக்கிறார்.
மேலும் படிக்க | 3 மாதத்தில் 16 கிலோ எடை குறைந்த ஆலியா பட்! வெறும் வயிற்றில் ‘இதை’ குடிப்பாராம்..
மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ