பூர்வ பத்ர நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சியால் சுப பலன்களைப் பெறப்போகும் அதிர்ஷ்ட 3 ராசிகளின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி நிறையப்போகிறது.
வசந்த பஞ்சமி 2025: இந்த முறை மிகவும் சிறப்பானதாக இருக்கப்போகிறது. பல்வேறு நன்மைகளை கொடுக்கக்கூடிய சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டார் என்று ஜோதிடத்தில் கூறுகின்றன. மேலும் இந்த வசந்த பஞ்சமிக்குப் பிறகு யாரெல்லாம் கஷ்டங்களிலிருந்து விடுபடப்போகின்றனர் என்று தெரிந்துகொள்வோம்.
சனி இடப்பெயர்ச்சி இந்த ஆண்டு மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே தனது ராசியை மாற்றிக்கொள்ளும்.
ஆனால், இந்த வருடம் சனி கிரகமானது தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றுகிறது என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி சரியாகக் காலை 8:51 மணிக்குச் சனி பகவான் பூர்வ பத்ர நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் நுழையவுள்ளார்.
கும்பம்: குடும்பத்துடன் நல்ல நேரத்தைச் செலவிடுவீர்கள். உறவில் அன்பு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான தடைகள் நீங்கும். தொழிலில் வருமான ஆதாயங்கள் அதிகரிக்கும்.
மேஷம்: நீங்கள் இந்த சனி இடப்பெயர்ச்சியில் பலனைப் பெறும் இன்னொரு ராசிக்காரர். நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள பணிகள் முடியும். சொந்த வீடு அல்லது தொழில் தொடங்க அமோகமான நேரம். வாகனம் மற்றும் நீண்ட நாள் ஆசை கனவுகள் நிறைவேறும் நல்ல தருணம்.
மன கஷ்டங்கள் மற்றும் ஆழ்ந்த சிந்தனைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுபடக்கூடிய நேரம் இது. தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கவும்.
துலாம்: சனி இடப்பெயர்ச்சியில் இந்த ராசியினுக்கு நல்ல அமோகமான நேரமாக அமைகிறது. நிதி பிரச்சனைகள் தீரும், வருமான ஆதாயங்கள் அதிகரிக்கும், தொழில் மற்றும் வேலையில் சலுகைகள் பெற வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம்.
இந்த ராசிக்காரர்களுக்கு நிம்மதியான மனநிலை உருவாகும். மன அழுத்தப் பிரச்சனையிலிருந்து வெளியில் வரு தொடங்குவார்கள். குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடையே பாசம் மற்றும் அக்கறை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.