அல்சரில் இருந்து காக்கும் பருத்திப்பால்.. நன்மைகள் என்னென்ன?

பருத்திப் பாலில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம். 

பருத்திப்பாலை நாம் வெறும் பானமாக மட்டும் பார்ப்பதை விட்டுவிட்டு அதில் உள்ள மருத்துவ குணங்கள் நாம் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பருத்திப்பாலில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /8

வாரத்தில் ஒருமுறை மாலை அல்லது காலை வேளையில் டீ அல்லது காபி குடிப்பதற்கு பதிலாக பருத்திப்பால் எடுத்துக்கொண்டால் அது நமது உடலுக்கு பல நன்மைகளை சேர்க்கும்.   

2 /8

பருத்தி விதையில் இருந்து பாலெடுத்து அதில் சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை (இஞ்சி குடும்பத்தை சேர்ந்த ஒரு தாவரம்), தேங்காய்பால், திப்பில், கடலைப்பருப்பு, மிளகு, கருப்பட்டி, உள்ளிட்ட பொருட்களை சேர்த்து செய்யப்படுகிறது. 

3 /8

பருத்திப்பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின்கள், புரதங்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், கனிமச் சத்துக்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.

4 /8

பருத்துப்பால் குடிப்பதால் அதிகமாக நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. அதனால் காலை அல்லது மாலை வேளையில் டீ, காபிக்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம். 

5 /8

இதனை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு என பல பிரச்சனைகளை தடுக்கவும், சரி செய்யவும் முடியும். 

6 /8

பருத்திப்பாலை அடிக்கடி எடுத்துக்கொள்ளவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் கெட்ட கொல்ஸ்டிராலை கரைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்க செய்கிறது. 

7 /8

பருத்திப்பால் எடுத்துக்கொள்வதன் மூலம் அல்சரை குணமாக்க முடியும். அல்சரை குணமாக்க நினைப்பவர்கள் பருத்திப் பாலை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கலாம். 

8 /8

மாதவிடாய் வலியால் மாதம் மாதம் அவதிப்படும் பெண்கள் பருத்திப்பால் குடிக்கலாம். இது அடிவயிற்றுப் பகுதியில் உள்ள பெல்விக் எலும்புகளை வலுவாக்குவதோடு வலியை குறைக்கிறது.