Upcoming Tamil Movies Releasing On February 2025 : இந்த 2025ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. இதற்கு காரணம், பொங்கலை முன்னிட்டு வெளியான மதகஜராஜா, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட சில படங்களும், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவை பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டை போல இல்லாமல், சில பெரிய ஹீரோக்களின் படங்களை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகி விட்டன. அப்படி, ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த மாதம் வெளியாக இருக்கும் படங்களின் லிஸ்டையும், அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் ஒரு படம் குறித்தும் இங்கு பார்ப்போம்.
விடாமுயற்சி:
2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் அஜித்தின் படம், விடாமுயற்சி. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். வில்லனாக அர்ஜுன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
விடாமுயற்சி படம், வரும் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொங்கலன்று வெளியாக வேண்டிய இந்த படம், சில காரணங்களால் தள்ளிப்போடப்பட்டது. இதற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த மாதம் வெளியாகும் படங்களில் இதற்குதான் அதிகளவு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
காதல் என்பது பொதுவுடைமை:
பிப்ரவரி மாதம் என்றாலே காதலுக்கான மாதம் என்று தானே அர்த்தம்? அப்போது காதல் படம் இல்லாமல் எப்படி? ஜெய பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் அப்படிப்பட்ட படம்தான், ‘காதல் என்பதுபொதுவுடைமை’. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், வினீத், ரோஹினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். LGBTQ சமூகத்திற்கு சமற்பிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்:
தனுஷ் இயக்கியிருக்கும் 3வது படம், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடித்திருக்கிறார். அவருடன் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை முதலில் இயக்க இருந்தவர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால், அந்த ஸ்கிரிப்டை தற்போது தனுஷ் வாங்கிக்கொண்டு அதை இயக்கியிருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், விடாமுயற்சி பட ரிலீஸால், வரும் 21ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டிராகன்:
லவ் டுடே படத்திற்கு பிறகு, பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் படம் டிராகன். இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக சிம்பு பாடியிருந்த ‘ஏன் டி விட்டு போன’ பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படமும், பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், விடாமுயற்சி பட ரிலீஸால் இதன் ரிலீஸும் 21ஆம் தேதிக்கு தள்ளிப்போடப்பட்டு விட்டது.
சபதம்:
ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம், சபதம். இது, தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகும் ஒரு பேய் படமாகும். இந்த படத்தில் ஆதியுடன் லக்ஷ்மி மேனன் நடித்திருக்கிறார். இப்படத்தை அறிவழகன் வெங்கடாச்சலம் இயக்குகிறார். இதனை, பிப்ரவரி 28ஆம் தேதி தியேட்டர்களில் காணலாம்.
மேலும் படிக்க | ஓடிடியில் வெளியாகும் 17 புது படங்கள்! புஷ்பா 2 to ஐடென்டிடி-எதை, எதில் பார்க்கலாம்?
மேலும் படிக்க | தமிழ் சினிமாவிற்கு ரூ.1000 கோடி நஷ்டம்! எல்லாத்துக்கும் காரணம் இந்த 2 படம்தான்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ