கல்லூரி மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி அறிவிப்பு

Scholarship | கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2025, 02:27 PM IST
  • கல்லூரி மாணவர்களுக்கான உதவித் தொகை
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
  • பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
கல்லூரி மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி அறிவிப்பு title=

Tamil Nadu Government, Scholarship | கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில், " அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார்  தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.வ) மிகப் பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric: Scholarship) திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மி.மி.வ/சீம மாணவ/மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2. முதுகலை, பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3) 2024-2025-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், Uhivorsity Managoment Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. கல்வி உதவித்தொகைக்கு, மாணாக்கர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும், கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28 02-2025 ஆகும்.

பழைய மாணவர்கள் :
(Renewal Students La. 2, 3 & 4 Year in the year 2024-25)

ஏற்கனவே, கல்லூரியில் கல்வி உதவிதொகை பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2, 3 (ம) 4 ஆம் ஆண்டு பயின்று வரும் மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை. சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 

புதிய மாணவர்கள்
(1 year student & the students who are not applied the scholarship during the year 2023-2024) நடப்பு கல்வியாண்டில் (2024-2025) 

புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

4) மேற்படி விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து. BC, MBC,& DNC வகுப்பை சார்ந்த மாணாக்கர்களை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

5) கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது." என பிற்படுத்தப்பட்டோர் நல முதன்மை செயலர் மற்றும் ஆணையர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | Magalir Urimai Thogai | ரூ.1000 உரிமைத்தொகை வாங்காத மகளிருக்கு முக்கிய அறிவிப்பு!

மேலும் படிக்க | தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு

மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News