இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விதிமுறைகளின்படி எந்த ஒரு வங்கியின் ஏடிஎம்மிலிருந்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்கலாம். ஒரு வாடிக்கையாளர் இந்த வரம்பை மீறினால், ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் ரூ. 21 செலுத்த வேண்டும். தற்போது இந்த கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை வங்கிகள் வைத்துள்ளன. வங்கிகள் மற்றும் ATM ஆபரேட்டர்கள் இருவரும் பெருநகர மற்றும் பெருநகரம் அல்லாத பகுதிகளில் கட்டணங்களை உயர்த்துவதற்கான NPCI-ன் முயற்சியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏடிஎம் பிரதிநிதிகள் குறிப்பாக நகர்புறம் அல்லாத பகுதிகளில் ஏடிஎம்களுடன் தொடர்புடைய செலவுகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர். இந்த அதிகரிப்புக்கு பணவீக்கம் அதிகரிப்பு, கடன் சதவீதம் உயர்வு, பணத்தை நிரப்புவதற்கான போக்குவரத்து செலவுகள் மற்றும் இதர தொடர்பான செலவுகள் அதிகரித்தது காரணம் என்று தெரிவிக்கின்றனர். பொதுவாக, இந்த கட்டணம் பரிவர்த்தனை தொகையின் சதவீதமாக கணக்கிடப்பட்டு பின்னர் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.
மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா... எளிமையான சட்டங்கள், எளிமையான மொழி
ஏடிஎம் கட்டண உயர்வு தொடர்பான என்பிசிஐயின்(NPCI) பரிந்துரைகளுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், ஏடிஎம்மில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ஐந்து இலவச பரிவர்த்தனை வரம்பை மீறும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விதிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணம் அதிகரிக்கும். ஏடிஎம் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய கட்டணங்களில் சாத்தியமான அதிகரிப்பு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் செலவு பயனர்களுக்கு கணிசமாக உயரும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் பேலன்ஸ் இருப்பு போன்றவற்றை சரிபார்ப்பது போன்ற ஏடிஎம்களில் பணமில்லா பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளன. இந்த புதிய கட்டண விவரங்கள் பல வாடிக்கையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, இலவச பரிவர்த்தனைகளுக்கான வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஏடிஎம்களில் பணம் எடுக்க நடைமுறை குறைந்து வந்தாலும், கையில் பணத்தை வைத்து கொள்ளும் பழக்கம் குறையவில்லை.
நகரங்களில் வசிக்கும் மக்கள் அதிகம் UPI மூலம் தான் பணம் செலுத்தி வருகின்றனர். ரூ. 10 முதல் ரூ. 10000 வரை எவ்வளவு இருந்தாலும் UPIஐ பயன்படுத்துகின்றனர். இதனால் நகர பகுதிகளில் உள்ள ஏடிஎம்கள் பெரும்பாலும் காலியாகத்தான் இருக்கின்றன. ஏடிஎம்களில் 5 இலவச பரிவர்த்தனை தாண்டினால் அதிக கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏடிஎம் செல்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையும் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ