ஆயுர்வேதத்தில், பல கடுமையான நோய்களிலிருந்து விடுபட உதவும் பல இலைகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் துளசி இலைகளும் அடங்கும். துளசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்து மதத்தில் துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தெய்வமாக வணங்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில், துளசி செடி ஒரு வரமாக கருதப்படுகிறது.
துளசி இலைகளில் வைட்டமின்கள் A, C, K, பொட்டாசியம், மெக்னீசியம், கால்ஷியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனை முறையாக பயன்படுத்தினால், சர்க்கரை உட்பட பல நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன, எப்போது, எப்படி சாப்பிடலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
துளசி இலைகளின் நன்மைகள்
துளசி இலைகளில் பல வகையான வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள நிலையில், அவை ஆரோக்கியத்திற்கு ஒரு வரமாக கருதப்படுகின்றன. இது ஆயுர்வேதத்தில் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. துளசி இலை நீரை தினமும் குடித்து வந்தால், ஒரு மாதத்தில் உடலில் பல நல்ல மாற்றங்களை காணலாம். அதன் பலன்கள் என்ன என்பதை முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. நீரிழிவு நோயாளிகளுக்கு மிக ச்சிறந்த மருந்தாக துளசி இருக்கும். ஏனெனில், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
2. செரிமானத்திற்கு நன்மை பயக்கும் என்பதால், மலச்சிக்கல், ஆசிடிட்டி போன்ற செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
3. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் என்பதால், பருவ கால நோய்கள் எதுவும் அண்டாது.
4. இருமல், சளி போன்றவற்றுக்கு அருமருந்து.
5. மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
6. வாய் துர்நாற்றத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
7. சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் துளசி இலை நீரை அருந்தி வர, சிறுநீர் பாதையில் உள்ள கற்கள் நீங்கும்.
8. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க துளசி உதவுகிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
9. துளசி இலையில் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. எனவே, உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
துளசி இலைகளை உட்கொள்ளும் சரியான முறை
துளசி இலைகளை பல வழிகளில் உட்கொள்ளலாம், இருப்பினும், துளசி இலைகளை உட்கொள்வதற்கான மிகச் சிறந்த வழி காலையில் 4 முதல் 5 துளசி இலைகளை மென்று சாப்பிடுவதாகும். இது தவிர வேண்டுமானால் துளசி இலையை கொதிக்கும் நீரில் போட்டு டீ செய்து குடிக்கலாம். இது தவிர, துளசி இலைகளை வெந்நீரில் ஊறவைத்து குடிக்கலாம். துளசி இலையை அரைத்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். துளசி பொடியை தண்ணீரில் கலந்து உட்கொள்ளலாம். துளசி இலைகளை எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம் என்றாலும், காலை நேரத்தில் வெறும் வயிற்றில், சாப்பிடுவது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஓட்ஸை நைட் ஊறவைத்து... காலையில் இப்படி சாப்பிடுங்க - தொப்பை பட்டுனு கரையும்!
மேலும் படிக்க | ஆண்களின் அழகை கெடுக்கும் குடல் அசுத்தம்... காரணமும் தீர்வும் முழு விவரம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ