LIC Jeevan Anand Scheme: உங்களின் எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க வேண்டும் என நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், எல்ஐசியின் இந்த திட்டம் உங்களுக்கு கைக்கொடுக்கும்.
நீங்கள் தினமும் ரூ.200க்கும் குறைவாக சேமித்தாலே குறிப்பிட்ட ஆண்டில் பெரிய தொகையை திரட்டலாம். எல்ஐசியில் இது என்ன திட்டம், இதன் பலன்களை இங்கு அறியலாம்.
உங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கும், சேமித்து வைக்கவும் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அதில் சிறந்த ஆப்ஷன்களுள் ஒன்று எல்ஐசி ஆகும்.
எல்ஐசியில் இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் குறைந்த அளவில் பணத்தை ஒதுக்கி மாதந்தோறும் சிறுகச் சிறுக பணத்தை சேமித்தாலே, குறிப்பிட்ட காலத்தில் பெரிய தொகையை பெறலாம். இதனை உங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கோ, கல்விச் செலவிற்கோ கூட செலவிடலாம். அந்த திட்டம் என்ன, அதன் பலன்கள் என்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் திட்டம்தான் அது. இதில் நீங்கள் தினமும் ரூ. 200 குறைவான தொகையை சேமித்தாலே ரூ.20 லட்சம் வரை நிதியை திரட்டலாம். மேலும், பெரியளவில் நிதியை திரட்ட வேண்டும் என்றால் அதற்கேற்ப அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்தை சேமிக்க வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
உங்களுக்கு ரூ.20 லட்சத்தை திரட்ட வேண்டும் என்றால், 30 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5,922 ரூபாய் பிரீமியாக செலுத்த வேண்டும். அதாவது, ஒருநாளுக்கு 197 ரூபாயாகும். மேலும், இது முதல் ஆண்டு பிரீமியம்தான்.
இரண்டாவது ஆண்டில் இருந்து இந்த திட்டத்தில் உங்களின் மாத பிரீமியம் ரூ.5797 பிரீமியாக குறைந்துவிடும். அதாவது ஒருநாளுக்கு 193 ரூபாய் ஆகும். முதலாண்டு மட்டுமே 5,922 ரூபாய் ஆகும்.
இந்த திட்டம் முதிர்ச்சி பெற குறிப்பிட்ட காலம் இருக்கும். நீங்கள் 30 ஆண்டுகள் என குறிப்பிட்டால் அதுவரை பிரீமியம் செலுத்த வேண்டும். அதன் பின்னரே முழு தொகையை எடுக்க முடியும். ஒருவேளை, பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால், அவரது வாரிசு 125% அடிப்படை காப்பீட்டுத் தொகையை பெறுவார்கள். இல்லையெனில் அதுவரை செலுத்தியிருந்த பிரீமியமில் 105% பெறுவார்கள்.
இந்த திட்டத்தில் போனஸ் ஆப்ஷனும் இருக்கிறது. அதாவது, நீங்கள் 30 ஆண்டுகளில் 20 லட்ச ரூபாயை திரட்டுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ரூ.25,20,000 வரை போனஸ் கிடைக்கும். இதன் கணக்கீட்டை அறிய எல்ஐசியின் இணையதளத்தை அணுகவும்.
இந்த திட்டத்தை 18-50 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். பாலிசி காலம் 15-35 ஆண்டுகள் வரை உள்ளன. இதனை நீங்கள் மாதம், காலாண்டு, அரையாண்டு, வருடாந்திரமாக கூட பிரீமியம் செலுத்தலாம்.