மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சக சுங்கச்சாவடிகள் வழியே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில், வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், வாகன உரிமையாளர்கள் ரூ.3000 செலுத்தி விட்டு ஓராண்டுக்கான டோல் பாஸை பெற்றுக் கொள்ளலாம்.
வருடாந்திர டோல் பாஸ் திட்டம்
தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு இந்த செய்தி பெரிய நிவாரணமாக இருக்கும். மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள இந்த புதிய வருடாந்திர டோல் பாஸ் முறை, கார் உரிமையாளர்களுக்கு டோல் கட்டணத்தைத் தவிர்க்க நல்ல வாய்ப்பை வழங்கும். இந்த பாஸ் மூலம் நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் தடையின்றி பயணிக்க முடியும்.
வாழ்நாள் பாஸ் திட்டம்
சுங்க கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய விரும்பினால், வாழ்நாளுக்கான பாஸையும் அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு, ஒரே நேரத்தில் ரூ.30,000 செலுத்த வேண்டும், அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் செலுத்தாமல் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்ளலாம்.
ஃபாஸ்டேக் இணைப்பு
தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வழங்கு இந்த பாஸ் உங்கள் FASTag உடன் இணைக்கப்படும். எனவே நீங்கள் புதிய பாஸ் வாங்க வேண்டியதில்லை. இது வசதியான முறையாக இருக்கும், ஏனெனில் டோல் பிளாசாவில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்கள் FASTag தானாகவே கட்டணத்தை ஈடு செய்யும்.
கட்டண விகிதங்களில் மாற்றங்கள்
சாலை போக்குவரத்து அமைச்சகம் பாஸ் திட்டத்தின் கீழ் சுங்க கட்டணத்தில் மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இந்த புதிய வருடாந்திர டோல் பாஸ் மிகவும் சிக்கனமான மற்றும் வசதியான ஆப்ஷனாக இருக்கும், குறிப்பாக தினசரி நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும் பல சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்வோருக்கும். தற்போதைய மாதாந்திர டோல் பாஸ் ஒரு சுங்கச்சாவடி வழியாக செல்லும் பயணிகளுக்கு மட்டுமே பொருத்தமானது. இதில் மாதத்திற்கு ரூ.340 செலவாகும், ஆண்டு முழுவதற்கும் ஆன கட்டணம் ரூ.4,080 ஆக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் முழுவதும் பயணிக்கலாம்
கார் உரிமையாளர்களுக்கு சிங்கிள் பாஸ் முறையை கொண்டு வருவது குறித்து அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக நிதின் கட்கரியின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. தற்போது முன்மொழியப்பட்ட புதிய வருடாந்திர டோல் பாஸ் வெறும் 3,000 ரூபாய்க்குக் கிடைக்கும். இது பயணிகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் முழுவதும் பயணிக்க வாய்ப்பளிக்கிறது. வெவ்வேறு டோல் பிளாசாக்களைக் கடந்து செல்பவர்களுக்கு, வெவ்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டியவர்களுக்கு இந்த பாஸ் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ