Saturn Planet Changes: சனி பகவான் வரும் மார்ச் மாதத்தில் இரண்டு மாற்றங்களை செய்கிறார், இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய ஜாக்பாட் கிடைக்கும்.
Saturn Planet Changes In March 2025: மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் சனி பகவான், பிப்.28ஆம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். இந்த மாற்றங்களால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கம் உண்டாகும். இதனால் ஏழரை சனி, சனி தசை காலகட்டம் சில ராசிகளுக்கு தொடங்கும், சில ராசிகளுக்கு முடியும் எனலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலத்தில் தங்களின் ராசியை மாற்றுவது வழக்கமாகும். அந்த வகையில், சனி பகவான்தான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு நீண்ட காலம் எடுப்பார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து பெயர்ச்சி ஆக இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
அந்த வகையில், வரும் மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். கடந்த 2023ஆம் ஆண்டில் அவர் கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்பத்தில் இருந்து தற்போது மீனத்திற்கு நுழைகிறார். இதனால் ஏழரை சனி, சனி தசை காலகட்டம் சில ராசிகளுக்கு தொடங்கும், சில ராசிகளுக்கு முடியும் எனலாம்.
மேலும், பிப். 28ஆம் தேதி முதல் சனி தனது நிலையையும் மாற்றுகிறது. அதாவது மார்ச் மாதத்தில் சனி பகவான் இரண்டு மாற்றங்களை செய்ய இருப்பதால் அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் பணமழை கொட்டும். வேலையிலும், வணிகத்திலும் பெரிய முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள்களாக இருந்த உடல்நிலை பிரச்னை விலகி ஓடும். கடன் பிரச்னை தீரும். குடும்பத்தில் நேர்மறையான சூழல் உருவாகும். செலவு குறையும்.
கடகம்: இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு புதிய இடங்களில் இருந்து சிறப்பான வேலைவாய்ப்புகள் உண்டாகும். பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். பொருளாதாரா ரீதியாக பலமடைவார்கள். வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.
மகரம்: புதுப்புது இடங்களில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் வரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கமே இருக்கும். நண்பர்கள் உடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். பழைய பிரச்னைகள் அனைத்தும் தீரும். உடல்நலனும் சீரும் சிறப்புமாக இருக்கும்.
தனுசு: இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு இந்த காலகட்டத்தில் அதிகமாகும். அதாவது அவர்களுக்கு செல்வம் பெருகும். சமூகத்தில் மதிப்பு உண்டாகும். சௌகரியமான வாழ்க்கை கிடைக்கும். திருமண வாழ்விலும் மகிழ்ச்சியே உண்டாகும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.