25 கிலோ எடை குறைந்த அஜித் குமார்! எப்படி தெரியுமா? ரகசியத்தை சொன்ன ஆரவ்..

Ajith Kumar Weight Loss Transformation Tips : சமீபத்தில் நடிகர் அஜித் குமார் உடல் எடை குறைந்து ஆளே மாறிப்போனார். அவர் இப்படி உடல் எடை குறைய உதவியது எது தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Feb 6, 2025, 04:53 PM IST
  • வெயிட் லாஸ் செய்த அஜித்..
  • ஆரவ் பகிர்ந்த சீக்ரெட்..
  • என்ன செய்தார் தெரியுமா?
25 கிலோ எடை குறைந்த அஜித் குமார்! எப்படி தெரியுமா? ரகசியத்தை சொன்ன ஆரவ்.. title=

Ajith Kumar Weight Loss Transformation Tips : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடித்திருக்கும் விடாமுயற்சி தமிழ் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தை எடுத்து அவர் சைன் செய்த படம் குட் பேட் அக்லி. அவர் குறித்த சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், திடீரென உடல் எடை குறைந்தது போன்ற ஒரு புகைப்படம் வெளியானது. இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

உடல் எடை குறைந்த அஜித்குமார்: 

நடிகர் அஜித், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு மூன்று விதமான தோற்றங்கள் இருக்கிறது. இதில் நார்மலான ஆளாக வரும் கதாபாத்திரத்திற்காக இவர் உடல் எடையை குறைத்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் அவர் துபாய் 24 H கார் ரேஸ் ப்ராக்டிஸ் பணிகளிலும் இருந்தார். இதனால் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற அவர் 25 கிலோ உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது.

ஆரவ் பகர்ந்த விஷயம்: 

சில முன்னணி திரை நட்சத்திரங்களின் படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலமான இவர், இப்போதும் பிக் பாஸ் ஆரவ் என்று அறியப்படுகிறார். இவரும் விடாமுயற்சி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

விடாமுயற்சி படத்தின் பிரமோஷன் பணிகளில் கலந்து கொண்ட போது இவரிடம் அஜித் உடல் எடையை குறைத்தது எப்படி என்பது குறித்து சீக்ரெட் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவ, ர், உடலை குறைக்க அஜித் குமார் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் போதில் இருந்தே, அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்ததாக கூறியிருக்கிறார். அசைவத்தை தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்த அவர், அதையும் அளவோடுதான் எடுத்துக்கொண்டாராம். இதன் காரணமாகத்தான் அவரது உடல் எடை வேகமாக குறைந்ததாக ஆரவ் கூறியிருக்கிறார்.

அஜித்தின் பழக்கங்கள்:

நடிகர் அஜித் குமாருக்கு நடிப்பை தவிர பிடித்த விஷயம், பைக் மற்றும் கார் ஓட்டுவது. இதனால் அவருக்கு பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவருக்கு மொத்தம் 13 அறுவை சிகிச்சைகள் நடத்துள்ளதாம். கடந்த ஆண்டு கூட மூளை மற்றும் காதுக்கு வழியே போகும் ஒரு நரம்பில் பிரச்சனை ஏற்படுவதன் காரணமாக சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.

முதலில் உடல் கச்சிதமாக இருப்பதற்காக நடிகர் அஜித்குமார் ஜிம்மில் 6 மணி நேரம் வொர்க் அவுட் செய்வார் என்று கூறப்பட்டது. அதேபோல எங்கு சென்றாலும் தனது டயட்டை விடாத அவர், தனது குக்கையும் கையுடன் கூட்டி சென்று விடுவாராம். இதனால் எங்கு சென்றாலும் சாப்பாட்டில் இவருக்கு கண்ட்ரோல் இருக்கும். தன் உடலை நன்றாக பார்த்துக் கொள்ளும் எண்ணம் கொண்ட அஜித், அதற்கான முயற்சிகளையும் கைவிடுவதில்லை என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்

மேலும் படிக்க | 1 வருடத்தில் 55 கிலோ எடை குறைந்த நடிகர் ராம்! எப்படி தெரியுமா? சீக்ரெட் சொல்கிறார்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News