இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோ, ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தையும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாணி திரைக்கதையையும் எடுத்துக்காட்டுகிறது.
மேலும் படிக்க | விடாமுயற்சி எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் தெரியுமா?
கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகத்திற்கு வருவதில் இந்த புரோமோ துவங்குகிறது. அவர் கிராமப்புற குடும்ப பின்னனியில் இருந்து வருவதால், அவர் தனது கணவரின் பெயரைக் கூற மறுக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கிறது. முழு அலுவலகமும் அவரின் கணவரின் பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. இறுதியில், அவள் சைகை மொழி மூலம் பெயரையறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்பின்னான வேடிக்கையான சம்பவங்கள் நகைச்சுவையுடன் முடிவடைகின்றன. இந்த புரோமோ கிரேஸியான கிராமத்தையும் அதன் மக்களையும் விவரிக்கும் வகையில், "வில்லங்கமான கிராமமும், அட்ராசிட்டியான ஆஃபீஸும்" என்ற பொருத்தமான டேக்லைனுடன் முடிகிறது.
நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான ‘ஹார்ட் பீட்’ இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர். ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
Kilinjidhu po..#Hotstarspecials #Office Streaming from Feb 21 on #Disneyplushotstartamil@igurumania @SekarVetri44995 @shivadirector83 @PARANTHAMANP51 @MimiKert1 pic.twitter.com/phnXaYkrj9
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 6, 2025
சமீபத்திய, 'ஹார்ட் பீட்' சீரிஸை ரசித்தவர்கள், இந்த 'ஆஃபீஸ்' சீரிஸைக் கொண்டாடுவார்கள். இந்த ஆஃபீஸ் சீரிஸின் கதை, ஒரு சிறிய, அழகான கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும், அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பின்னணியில், ஒரு அரசு அலுவலகத்தில் நடக்கும் நகைச்சுவையான நிகழ்வுகளும், வித்தியாசமான சம்பவங்களும், பார்வையாளர்களைச் சிரிப்பில் ஆழ்த்துவது உறுதி. இந்த ஆஃபீஸ் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலான நகைச்சுவையால் நிரம்பியுள்ளது. மனம் விட்டுச் சிரித்து மகிழ, ஒரு அட்டகாசமான சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி அவ்ளோ தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ