PM Kisan: 19வது தவணை இந்த நாளில் வரும், ஆனால் இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது

PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இந்த ரூ.6 ஆயிரம் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 6, 2025, 03:07 PM IST
  • பிஎம் கிசான் திட்டம் என்றால் என்ன?
  • பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
  • பிஎம் கிசான் பயனாளிகள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்.
PM Kisan: 19வது தவணை இந்த நாளில் வரும், ஆனால் இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது title=

PM Kisan Samman Nidhi Yojana: நம் இந்திய நாட்டின் உயிர்நாடியாக இருப்பது விவசாயமும் விவசாயிகளும். விவசாயிகளின் நலன் காக்க அரசு பல வித திட்டங்கள தீட்டுகிறது. விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்டுள்ள பிரத்யேகமான திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமும் ஒன்று.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

நாட்டில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய அரசு நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இந்த ரூ.6 ஆயிரம் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. 

PM Kisan: பிஎம் கிசான் திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் இந்திய அரசு நாட்டின் சிறிய மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அவர்களது வருமானத்தை அதிகரிக்க விரும்புகிறது. இந்தத் திட்டத்தின் மொத்தம் 18 தவணைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. 18வது தவணையின் பலன் கிடைத்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. இப்போது விவசாயிகள் 19வது தவணைக்காகக் காத்திருக்கிறார்கள்.

PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 19வது தவணையை பிப்ரவரி 24, 2025 அன்று வெளியிடும் என்று கூறியுள்ளார். வேளாண் அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, நாட்டில் உள்ள பல விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிஎம் கிசான் பயனாளிகள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்: 

- PM Kisan: இந்த முறை, பிஎம் கிசான் 19வது தவணைக்கான பணம் சில விவசாயிகளின் கணக்கில் வராமலும் போகலாம். 

- eKYC Completion:இந்தத் திட்டத்தின் கீழ் தங்கள் e-KYC மற்றும் நிலப் பதிவுகளை இன்னும் சரிபார்க்காத விவசாயிகளுக்கு அடுத்த தவணையின் பலன் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

- Direct Benefit Transfer: மேலும், தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடி பலன் பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்தாத விவசாயிகளுக்கும் அடுத்த தவணைக்கான பலன் கிடைக்காது. 

- Aadhar Card: ஆதார் அட்டையுடன் வங்கிக் கணக்கு இணைக்கப்படாத விவசாயிகளின் அடுத்த தவணை தொகையும் சிக்கிக்கொள்ளக்கூடும்,

- Bank Account Details: இது தவிர, திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றில் தவறான விவரங்களை உள்ளிட்ட விவசாயிகளும் அடுத்த தவணைத் தொகையை பெற முடியாது.

பிஎம் கிசான் திட்டத்தின் அனைத்து தவணைகளுக்கான தொகையையும் தவறாமல், எந்த வித பிரச்சனையும் இல்லாமல் பெற, மேலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.

மேலும் படிக்க | ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு! உயர்கிறது கட்டணங்கள்!

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்: மார்சில் 56% அகவிலைப்படி, டிஏ அரியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News