Delhi Election Result News: டெல்லி தேர்தலில் வெல்லப் போவது யார்? அதாவது டெல்லிக்கு ராஜாவாக போவது யார்? என்பதிலே மும்முனை போட்டி காணப்படுகிறது. குறிப்பாக தற்போது டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மற்றும் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. அதாவது நேற்றைய முந்தினம் தேர்தல் முடிந்தவுடன் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின.
தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளில் கிட்டத்தட்ட ஏழு பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போல்களில் ஐந்து எக்ஸிட் போல்கள் பாஜக அபார வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தார்கள். மறுபுறம் இரண்டு எக்ஸிட் போல்களில் மேட்ரிஸ் மற்றும் சாணக்கிய அரண் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே பெரிய அளவுக்கு வித்தியாசம் இருக்காது. இழுபறி இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதேபோல ரிபப்ளிக் போன்ற சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில் இழுபரி வாய்ப்பு ஏற்படலாம் என்ற வகையில் தான் குறிப்பிட்டிருந்தார்கள்.
தற்பொழுது வெளியாகி உள்ள மூன்று முக்கிய எக்ஸிட் போல் முடிவுகள் மூலம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறியுள்ளனர். அதாவது அந்த மூன்று எக்ஸிட் போல் முடிவுகள் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என கூறியிருக்கிறார்கள்.
இந்த மூன்று எக்ஸிட் போல்களில் முதலில் சட்டா பஜார் குறித்து பார்ப்போம். சட்டா பஜார் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 34 லிருந்து 36 இடங்களும், பாஜகவுக்கு 34 லிருந்து 36 இடங்களும், காங்கிரஸ் பூஜ்ஜியம் என கணித்திருக்கிறார்கள். அதாவது இழுபறி என்ற நிலையிலே கணித்து தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு இருக்கிறதோ? என்ற கேள்வி எழுப்பும் வகையிலே சட்டா பஜாரின் முடிவுகள் வந்திருக்கின்றன.
சட்டா பசார் யார் என்றால், பலோடி சட்டா பசார் என்ற இந்த அமைப்பு ராஜஸ்தானிலே செயல்படுகிறது. பங்கு வர்த்தக சந்தைகள், பங்கு மார்க்கெட் சந்தைகள், பெட்டிங் சந்தைகள் குறித்து கணிப்புகளை அவ்வப்போது வெளியிடுவார்கள். கடந்த முறை ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெறும் என கணித்தவர்கள். அதேபோல தேர்தல் முடிவுகளும் வந்தன. எனவே அந்த வகையில் தற்போது டெல்லி கணிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி WEE Preside மற்றும் Mind Brink என்ற இரண்டு நிறுவனங்களும் தன்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கின்றன. இதில் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் எனக் கணித்துள்ளார்கள்.
வி பிரிசைடு (WEE Preside) என்ற நிறுவனத்துடைய கருத்துக்கணிப்பின் படி ஆம் ஆத்மி 46 லிருந்து 52 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 18 லிருந்து 23 இடங்களையும் மற்றும் காங்கிரஸ் இரு இடத்தையும் கைப்பற்றும் எனக் கூறியுள்ளது.
மைண்ட் பிரிங்க் (Mind Brink) நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு, ஆம் ஆத்மி கட்சிக்கும் 44 முதல் 49 இடங்களும், பாஜகவுக்கு 21 முதல் 25 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கும் பூஜ்ஜியம் முதல் ஒரு இடம் கிடைக்கும் எனக் கருத்துக்கணிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த வி பிரிசைடு மற்றும் மைண்ட் பிரிங்க் இரண்டு அமைப்பும் ஆம் ஆத்மி கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார்கள். மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சர் ஆகக்கூடிய வாய்ப்பு இருப்பதை போல கணித்திருக்கிறார்கள்.
ஆனால் ஒட்டுமொத்தமாக பிரபல தொலைக்காட்சி சேனல்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளை பார்க்கும் பொழுது டெல்லியில் உள்ள இந்தி மற்றும் ஆங்கில சேனல் என ஏழு சேனல்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் ஐந்து சேனல்கள் பாஜக வெற்றி பெறும் என கூறியிருக்கிறார்கள். அதேநேரம் இரண்டு நிறுவனங்கள் டெல்லியில் இழுபரி நீடிக்கும் என்ற நிலையில் குறிப்பிட்டிருகிறார்கள்.
ஆனால் இந்த வி பிரிசைடு மற்றும் மைண்ட் பிரிங் இரண்டுமே ஆம் ஆத்மி வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறது.
டெல்லியை பொறுத்தவரை குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட நியூ டெல்லி தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரவேஷ் வர்மா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்தீப் தீக்ஷித் இவர்கள் இருவரும் முன்னாள் முதலமைச்சர்களின் மகன் ஆவார்கள்.
முன்னாள் முதலமைச்சர் சாகித் சிங் வர்மாவின் மகன் தான் பிரவேஷ் வர்மா. முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்தின் மகன் தான் சந்தீப் தீக்ஷித். எனவே இவர்கள் இருவரும் தற்போது கெஜ்ரிவாலுக்கு எதிராக களம் இறங்கி இருப்பதால் கடும் போட்டி நிலவுகிறது. எனவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி, தோல்வி இருக்குன் எனக் கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
அதேபோன்று தற்போதைய டெல்லி முதல் அமைச்சர் அதிர்ஷியோடு கல்காஜி சட்டமன்ற தொகுதியிலும் கடும் போட்டி நிலவும் என்ற சூழல் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான எக்ஸிட் போல்கள் பாஜக வெற்றி பெறுவார்கள் என்ற வகையில்தான் கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால் ஒரு சில கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார்.
எது எப்படியோ? நாட்டின் தலைநகர் டெல்லியை ஆளப்போகும் ராஜா யார்? பாஜக-வா? ஆம் ஆத்மி? அல்லது எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி தர முயற்சி காங்கிரஸா? என்பதை நாளை காலை நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க - டெல்லியில் கருத்துக்கணிப்பு மெய்யாகுமா? 2020இல் Exit Poll கணித்ததும், நடந்ததும் இதோ!
மேலும் படிக்க - டெல்லி தேர்தல் 2025: தொகுதி வாரியாக அனைத்து கட்சி வேட்பாளர்களின் முழு பட்டியல்!
மேலும் படிக்க - டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ