Budget 2025 Tamil People Who Presented Union Budget: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இவரைப்போல தமிழகத்தை சேர்ந்த பலர் இவருக்கு முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
Budget 2025 Tamil People Who Presented Union Budget: நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மத்திய பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், எந்த துறைக்கு, எந்த சலுகைகள் அல்லது வரி விலக்குகள் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகமாக எழுந்துள்ளது. இந்த மத்திய பட்ஜெட்டை, இதோடு 8வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவருக்கு முன்னரே பல தமிழர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கின்றனர். அவர்கள் யார் என்பது குறித்தும், இதில் சிறப்பாக செயல்பட்டவர்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரையை சேர்ந்தவர். சென்னை மற்றும் திருச்சியில் படித்து வளர்ந்த இவர், டெல்லியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இன்று 8வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இவருக்கு முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1947 இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு நாட்டின் முதல் வரவு செலவு கணக்குகளை பார்த்தவர், ஒரு தமிழர். இவரது பெயர் சன்முகம் செட்டியார். இவர், ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.
1957-58 மற்றும் 1964-65 ஆகிய காலங்களில் கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். இவர் சென்னையை சேர்ந்தவர். நாட்டின் நிதி அமைச்சராக 2 முறை பதவி வகித்த முதல் ஆள் இவர்.
இந்திராகாந்தியின் அமைச்சரவையில் 1975ஆம் ஆண்டு நிதி அமைச்சராக பதவி வகித்தவர், சிதம்பரம் சுப்ரமணியம். இவர் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்து, சென்னையில் படித்தவர்
இந்திராகாந்தி அமைச்சரவையில் 1980-81 வரை பதவியில் இருந்தவர் வெங்கடராமன். இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர்.
பா.சிதம்பரம், 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இன்று வரை 1997ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த பட்ஜெட் இன்று வரை கனவு பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. அதிக முறை பட்ஜெட் தாக்க செய்த அமைச்சர்களில் முதல் இடத்தில் மொரார்ஜி தேசாய் இருக்கிரார். இரண்டாம் இடத்தில் பா.சிதம்பரம் இருக்கிறார். இவர் இருந்த காலத்தில் நாட்டின் நிதி வளர்ச்சி செழுமையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட சவால்களை சந்தித்து வருகிறார்.