இதய ஆரோக்கியத்தை உறுதிபடுத்தனுமா.. அப்போ கண்டிப்பா இத ஃபாலோ பண்ணுங்க!

பழச்சாறுகள் குடிப்பதால் இருதயம் தொடர்பான பிரச்சனைகள் குறையுமா? என்பதை இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 

Written by - R Balaji | Last Updated : Jan 31, 2025, 09:37 PM IST
  • இதய பிரச்சனையை தடுக்க உதவும் பானங்கள்
  • எந்தெந்த பழங்களாம் நல்லது
இதய ஆரோக்கியத்தை உறுதிபடுத்தனுமா.. அப்போ கண்டிப்பா இத ஃபாலோ பண்ணுங்க! title=

முந்தைய காலத்தில் இதயம் தொடர்பான பிரச்சனையால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பாதிக்கப்படுவர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கங்களால் இளம் வயதிலேயே இதயம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். 

நன்றாக நடமாடி வரும் இளைஞர்கள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனை தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன. அந்த வகையில் தினமும் பழச்சாறுகள் எடுத்துக்கொள்வது அவசியம் ஆகிறது. குறிப்பாக சில பழச்சாறுகள் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதாக உதவுகிறது. அப்படி எந்தெந்த பழச்சாறுகள் இதயத்திற்கு ஆரோக்கியம் தருகிறது என்பதை இங்கு பார்க்கலாம். 

பீட்ரூட் 

பீட்ரூட் ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கு சக்தி வாய்ந்தது. இதனை குடிப்பதால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. அதேபோல் இரத்த நாளங்களை மேம்படுத்தவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பெரிதாக உதவுகிறது. 

மாதுளை ஜூஸ்

ஆக்ஸிஜனேற்றிகளுக்கு பெயர் பெற்றது மாதுளை. இதனை சாறாக பகிர்வதன் மூலம் நமது இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும். வீக்கத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

மேலும் படிங்க: பிறரின் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்ய ஈசியான வழி! ‘இதை’ பண்ணுங்க போதும்..

தக்காளி 

தக்காளி ஜூஸ் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இதில் அதிக ஊட்டச்சத்துகளும் ஆன்டி ஆக்ஸிடெண்டுகளும் உள்ளன. இதனை காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் குடித்தால் மிகவும் நல்லது. சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான தக்காளி ஜூஸ் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைப்பதன் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கிறது.

ஆரஞ்சு 

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆரஞ்சு  ஜூஸ் மூளை வளர்ச்சிக்கும் முதுகுத் தண்டு வடத்திற்கும் நன்மை தருகிறது. மேலும் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். இதனை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.    

ஆப்பிள் 

ஆப்பிளில் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஆண்டி - ஆக்ஸிடண்ட்கள் போன்றவை உள்ளன. ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இதனை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பங்களிக்கிறது. 

திராட்சை  

திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க, வீக்கத்தைக் குறைக்க மற்றும் எல்டிஎல் ஆக்சிஜனேற்றத்தை தடுக்க உதவுகிறது.    

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிங்க: உடல் எடை மடமடன்னு குறைய..பிளாக் காஃபியுடன் ‘இதையும்’ சேர்த்து சாப்பிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News