Home Remedies for Bloating: இந்த நவீன யுகத்தில் மக்களின் வாழ்க்கை முறை பெரிய அளவில் மாறிவிட்டது. மக்களுக்கு தங்கள் உணவில் கட்டுப்பாடு இல்லை அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களும் சரியாக இல்லை. இப்படிப்பட்ட காரணங்களால், வயிற்றுப் பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமாகவோ அல்லது கனமாகவோ இருப்பது இப்போது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இவை செரிமான பிரச்சினைகள் என்று அழைக்கப்படுகின்றன.
செரிமான பிரச்சனைகளில் மிக முக்கியமானது வயிற்று உப்புசம். பெரும்பாலானவர்களுக்கு உணவு சாப்பிட்ட உடனேயே இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சிலருக்கு உணவு சாப்பிட்ட பிறகு வாயு பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில், குறிப்பாக ஆண்களுக்கு சாப்பிட்ட உடன், வயிறு பெரிதாகிவிடும். சிலர் கொஞ்சம் சௌகரியமாக உணர தங்கள் பேண்ட்டின் பொத்தான்களைத் திறக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.
சில எளிய, இயற்கையான வழிகளில் இந்த வயிற்று பிரச்சனகளை சரி செய்யலாம். வயிறு உப்புசம் பிரச்சனையைத் தவிர்க்க உதவும் 5 எளிய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த 5 குறிப்புகள் உதவும்
இஞ்சி நீர்:
தினமும் 1 கிளாஸ் இஞ்சி நீர் குடிப்பது நன்மை பயக்கும். சாப்பிட்ட பிறகும் இந்த தண்ணீரை குடிக்கலாம். இதைச் செய்ய, அரை அங்குல இஞ்சித் துண்டை நறுக்கி, 1 கிளாஸ் தண்ணீரில் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். நீர் சற்று ஆரியவுடன் அதை வடிகட்டி குடிக்கவும்.
பெருங்காயம்:
வயிற்றில் ஏற்படும் அசவுகரியங்களை சரி செய்ய பெருங்காயம் மிக நல்லது. இதை வெந்நீர் அல்லது மோரில் கலந்து குடிக்கலாம்.
பப்பாளி மற்றும் வாழைப்பழம்:
வயிறு உப்பசம் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் வாழைப்பழம் மற்றும் பப்பாளியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இந்த இரண்டு பழங்களும் செரிமான சக்தியை அதிகரிப்பதோடு வயிற்றை சுத்தம் செய்யவும் உதவுகின்றன.
வஜ்ராசனம்:
உணவு சாப்பிட்ட பிறகு, சிறிது நேரம் வஜ்ராசனத்தில் அமரவும். இப்படிச் செய்வதன் மூலம் நமது செரிமானம் மேம்படுகிறது, இதனால் உணவு சரியாக ஜீரணமாகிறது.
இடது பக்கத்தில் தூங்குங்கள்:
செரிமானம் அல்லது வாயுத்தொல்லை அதிகமாக இருந்தால், உங்கள் இடது பக்கத்தில் தூங்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் வயிற்றின் நிலையை சரியாக வைத்திருக்கிறது. இப்படி தூங்குவதன் மூலம் செரிமானம் சரியாக நடைபெறுகிறது.
உடல் இயக்கம்:
உணவு சாப்பிட்ட உடனே படுப்பதோ, அல்லது அப்படியே அமர்ந்திருப்பதோ சரியானதல்ல. ஆனால், சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதும் நல்லதல்ல. எனினும், லேசாக நடப்பது போன்ற உடல் இயக்கம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாப்பிட்ட உடனே படுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ