மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையில் நிவாரணம் அளிக்கும் வகையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) விதிகளை மாற்றயமைத்துள்ளது.
புதிய விதிகளின் தாக்கம்
புதிய முடிவு மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, அதிக நிதிச் சுமையின்றி தங்களது உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையைத் தொடர முடியும். மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது பிரீமியங்களை அதிகரிப்பதற்கு முன்பும், பாலிசிகளைத் திரும்பப் பெறுவதற்கும் முன் கட்டுப்பாட்டாளரைக் கலந்தாலோசிக்க வேண்டும், இது வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும்.
மருத்துவ காப்பீட்டு பிரீமியம்
காப்பீட்டு நிறுவனங்கள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமாக மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தை அதிகரிக்க முடியாது என்று அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் பிரீமியத்தை 10% க்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும் என்றால், இதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் IRDAI-யிடம் அனுமதி பெற வேண்டும்.
மூத்த குடிமக்களின் உடல்நலக் காப்பீட்டு
சமீபத்திய ஆண்டுகளில் சில காப்பீட்டு நிறுவனங்கள் திடீரென மூத்த குடிமக்களின் உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்தை பெருமளவு அதிகரித்ததாக வந்த புகார்களை அடுத்து, காப்பீட்டு பிரீமியத்தை தன்னிச்சையாக உயர்த்த தடை விதிக்கும் நோக்கில்
IRDAI இந்த முடிவை எடுத்தது.
புதுப்பிப்பதில் உள்ள சிரமங்கள்
வயதானவர்கள் காப்பீடு பெறுவதில் அல்லது புதுப்பிப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், இந்த புதிய விதியின் கீழ், சரியான காரணம் மற்றும் அனுமதியின்றி நிறுவனங்கள் பிரீமியத்தை 10% க்கு மேல் அதிகரிக்க முடியாது.
காப்பீட்டை நிறுத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும்
எந்தவொரு தனிநபர் மருத்துவக் காப்பீட்டையும் நிறுத்துவதற்கு முன், எந்தவொரு காப்பீட்டு நிறுவனமும் கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும் என்றும் IRDAI தெளிவுபடுத்தியுள்ளது. பாலிசிதாரர்கள் திடீரென எந்தத் திட்டத்திலிருந்தும் திடேரென நீக்கக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் தொடர்ந்து காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகவும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளின் பட்டியல் மற்றும் பேக்கேஜை தீர்மானிப்பதற்கான வழிமுறைகள்
IRDAI மருத்துவமனைகளை எம்பானல் செய்ய நடவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தவிர, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (PMJAY) முறையில் சுகாதாரப் காப்பீட்டினை முடிவு செய்ய காப்பீட்டு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது காப்பீடு செய்தவருக்கு சீரான மற்றும் வெளிப்படையான சிகிச்சையை வழங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ