மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மருத்துவத் துறையில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
மருத்துவ சாதனங்கள் துறையானது உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் மற்றும் அணுகல் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் நவீன சுகாதாரத்தின் ஒரு மூலக்கல்லாக மாறியுள்ளது.
இந்தியாவில், 21 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட மாற்றம், உயர்தர, மலிவு மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக நாட்டை நிலைநிறுத்தியுள்ளது.
உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் (பிஎல்ஐ) மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் வலுவான கவனம் செலுத்துதல் போன்ற இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்கு முன்முயற்சிகளால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் புதுமை, முதலீடுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உற்பத்தியில் தன்னிறைவைத் தூண்டியுள்ளன. மத்திய பட்ஜெட் நெருங்கி வருவதால், இந்த வேகத்தைத் தக்கவைக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஏற்றுமதிகள் மற்றும் தொழில் சார்ந்த ஊக்குவிப்புகளில் தொடர்ந்து ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
மெரில் நிறுவனத்தின், வாழ்க்கையை மாற்றும் உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் மருத்துவ தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் நிலையை முன்னேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று மெரில் லைஃப் சயின்ஸில் கார்ப்பரேட் வியூகத்தின் மூத்த துணைத் தலைவர் சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் காணப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்களின் காலநிலை நோய் பரவல் மற்றும் சமூக பொருளாதார அமைப்புகளில் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் போன்றவை மூலம் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
தொற்று நோய் பரவும் அபாயம் நாட்டை பெரிதும் ஆபத்தான நிலைக்கு அழைத்துச் செல்வதைக் கவனத்தில் கொண்டு இந்த கவலைகளை நிவர்த்தி செய்யவும் ஆரோக்கிய அணுகுமுறை தேவைப்படும் கட்டாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுகாதார அமைப்பை மேம்படுத்தவும் மற்றும் சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்தவும் இந்த குறிப்பிட்ட ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.