ஒல்லி-பெல்லி இடுப்புக்கு இலியான கடைப்பிடித்த ஹெல்தி மந்திரம்! இதுதான்..

Actress Ileana Diet For Weight Loss : பிரபல நடிகை இலியான, திரையுலகை விட்டு விலகுவதற்கு முன்பு இடுப்பழகியாக அறியப்பட்டார். இவர் அப்படி இருந்த போது என்ன டயட்டில் இருந்தார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Jan 29, 2025, 07:55 PM IST
  • ஒல்லி பெல்லிக்கு இலியானா என்ன செய்தார்?
  • ஃபாலோ செய்த ஹெல்தி மந்திரம்..
  • என்னன்னு தெரிஞ்சிக்கோங்க..
ஒல்லி-பெல்லி இடுப்புக்கு இலியான கடைப்பிடித்த ஹெல்தி மந்திரம்! இதுதான்.. title=

Actress Ileana Diet For Weight Loss : “ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி” என்ற பாடலுக்கு, இடுப்பே இல்லாதவர்களையும் இடுப்பை ஆட்டி ஆட வைத்தவர் இலியானா. சில வருடங்களுக்கு முன்பு வரை கூட, “ஆமாம்..பெரிய இலியானா இடுப்பு” என ஒல்லியாக இருப்பவர்களுக்கு உவமையாக காட்டப்பட்டவர் இவர். தமிழில் பெரும்பாலும் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்கள் மூலம் பலர் இவரை ரசித்ததுண்டு. 

திரையுலகில் ஆக்டிவாக இருந்த போது இலியானா டயட் மற்றும் உடல் எடை விஷயத்தில் மிகவும் ஸ்டிரிக்ட் ஆக இருந்தார். அப்போது அவர் எடையை மெல்லியதாக வைத்திருக்க அவர் பின்பற்றிய டயட் குறித்து இங்கு பார்ப்பாேம்.

சாப்பாடு விரும்பி:

பிற நடிகைகளை போல இலியானாவும் டயட்டில் இருந்தாலும் சாப்பாட்டையும் விரும்பி சாப்பிடுவாராம். ஆனால், இவர் சாப்பிடும் உணவுகள் ஹெல்தியானவையாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிடும் உணவை, 4-5 வேலைகளாக பிரித்து, சிறிது சிறிதாக சாப்பிடுவாராம். இது, அவரது எடையை சரியாக பல நாட்களுக்கு பராமறிக்க உதவியதாக கூறப்படுகிறது.

நீர்ச்சத்து:

யாராக இருந்தாலும் உடல் எடையை சரியாக பராமரிக்க உடலில் நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். தான் சாப்பிடாத வேளைகளில் இளநீர், பழச்சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களை குடித்து ஹெல்தியாக நீர்ச்சத்துடன் தனது உடலை பார்த்துக்கொண்டார், இலியானா. இது, அவரது சரும பளபளப்பிற்கும் உதவியதாக கூறப்படுகிறது.

காலை உணவு:

இலியானா, எந்த வேளை உணவை எப்படி சாப்பிடுகிறாரோ இல்லையோ, காலை உணவை நன்றாக சாப்பிடுவாராம். காலையில் மட்டும் பிரெட், முட்டை மற்றும் காஃபி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்வாராம். இதனால், அவர் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு இல்லாமல் இருக்க முடியுமாம். இதனால், மதிய உணவை சிறிதளவாக எடுத்துக்கொள்ள முடியும்.

மதிய உணவு:

இலியானா, மதிய வேளை உணவை அதிக புரத உணவை எடுத்துக்கொள்வாராம். பெரும்பாலும் அந்த உணவுகளில் சிக்கன், மீன், பச்சை காய்கறிகள், பருப்பு, அரிசி சாதம் மற்றும் சப்பாத்தி ஆகியவை இருக்குமாம். இவை நாள் முழுவதும் முழுமையாக உணர வைப்பதோடு பசி உணர்வையும் பெரிதாக ஏற்பட விடாது. இதனால், அதிகம் சாப்பிடுவதை தடுக்க முடியும்.

மாலை ஸ்னாக்ஸ்:

மாலையில் இலியானா சாப்பிடுவது மிகவும் சிம்பிளான ஸ்னாக்ஸ்தான். அது, டீயும் பிஸ்கட்டும் மட்டும்தான். இது, அவரை முழுமையாக உணர வைக்குமாம்.

இரவு உணவு:

இரவில் இலியானா மிகவும் லைட் ஆன உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வாராம். அதையும் 8 மணிக்குள்ளாகவே எடுத்துக்கொள்கிறார். இரவில் அவர் பெரும்பாலும் எடுத்துக்கொள்ளும் டின்னர் காய்கறிகள் போட்ட சப்ஜி, பருப்பு தால் மற்றும் சப்பாத்தி ஆகியவைதான்.

வர்க்-அவுட்:

இலியான, முன்னர் தினசரி அடிக்கடி வர்க்-அவுட் செய்து வந்தார். ஸ்குவாட்ஸ், கார்டியோ உடற்பயிற்சிகள் ஆகியவை இவரது தினசரி வர்க்-அவுட் ஆக இருந்து வந்தது. இதுவே அவரது எடையையும் இடையையும் பாலன்ஸ் உடன் மெயின்டெயின் செய்யவும் உதவியிருக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..

மேலும் படிக்க | உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைத்த வித்யா பாலன்! என்ன செய்தார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News