February Bank Holiday Latest News: தேசிய விழாக்கள், பிராந்திய நிகழ்வுகள் மற்றும் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் காரணமாக பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் பல வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும். அதாவது பிப்ரவரி மாதத்தில் வங்கிகள் மொத்தம் 14 நாட்கள் செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. அதுக்குறித்த விவரங்கள் தெரிந்துக்கொள்ளுவோம்.
வங்கி விடுமுறை எச்சரிக்கை
வரும் பிப்ரவரி மாதத்தில் அதிகமான நாட்கள் வங்கிகள் விடுமுறை இருப்பதால், உங்கள் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை இடையூறுகள் இல்லாமல் மேற்கொள்ள திட்டமிட்டு கொள்ளுவது அவசியம். இந்தியாவின் வங்கி விடுமுறைகள் பெரும்பாலும் பிராந்திய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களைப் பொறுத்தது. அதேநேரம் வங்கி விடுமுறை என்பது மாநிலங்களுக்கு இடையே வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கி: வருடாந்திர வங்கி விடுமுறை பட்டியல்
ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர வங்கி விடுமுறை நாட்கள் குறித்து விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியிட்ட பட்டியலின்படி, "பல்வேறு மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட மாநில விடுமுறை நாட்களும், இரண்டாவது, நான்காவது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமை நாட்கள் வழக்கமான வங்கி விடுமுறை நாட்களாகும். ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வங்கிகள் அதிகமான விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளன.
பிப்ரவரி 2025 மாதம் வங்கி விடுமுறை நாட்கள் விவரங்கள்
பிப்ரவரி 2, 3, 2025: வசந்த பஞ்சமி / சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதால், பஞ்சாப், ஹரியானா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 11, 2025: தமிழ்நாட்டில் பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 12, 2025: குரு ரவிதாஸ் ஜெயந்தியை அடுத்து பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 15, 2025 லுய்-நை-நி (Lui Ngai Ni) விழா கொண்டாடப்படுவதால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை. இது மணிப்பூரின் நாகா பழங்குடியினரால் அனுசரிக்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு முதல் இந்த கொண்டாட்டம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 19, 2025: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி கொண்டாடப்படுவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 20, 2025: அருணாச்சலப் பிரதேச மாநில நாள் / மிசோரம் மாநில நாள் கொண்டாடப்படுவதால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை. 1987 ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக இருந்தது மாநிலங்களாக மாறியதை நினைவுக்கூரும் நாளாகும்.
பிப்ரவரி 26, 2025: தமிழ்நாடு, புது தில்லி, பீகார், கோவா, மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி உட்பட மாநிலங்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது.
பிப்ரவரி 8, 22, 2025: இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமை வங்கிகள் செயல்படாது.
பிப்ரவரி 2, 9, 16, 23, 2025: அனைத்து ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வங்கிகள் செயல்படாது.
ஆன்லைன் வங்கி சேவைகள் செயல்படுமா?
வங்கிகள் நேரடியாக செயல்படாது என்றாலும், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ (UPI) சேவைகள் போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும். இருப்பினும், தொடர் விடுமுறைகள் காரணமாக ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் சில இடையூறுகளை ஏற்படுத்தக் கூடலாம். எனவே பணப் பரிவர்த்தனைகளை சிரமம் இல்லாமல் மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஆன்லைன் வங்கி சேவைகள் செயலில் இருப்பதையும், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதையும் உறுதி செய்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கா! வருமான வரி நோட்டீஸ் வரலாம்? எச்சரிக்கை
மேலும் படிக்க - குறைந்த சம்பளம் வாங்கினாலும் இந்த வங்கிகள் உங்களுக்கு லோன் தருகின்றன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ