Budget 2025: இந்த பட்ஜெட்டில் பழைய வரி முறை முற்றிலுமாக நீக்கப்படுமா? புதிய வரி அடுக்குகள் வருமா?

Union Budget 2025: பழைய வரி முறையை அரசாங்கம் முற்றிலும் அகற்றி விடுமா? இவற்றில் கிடைத்து வரும் வரிச்சலுகைகள் இனி கிடைக்காதா? நிபுணர்களின் கணிப்பு என்ன? இந்த கேள்விகளுக்கான விடையை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 26, 2025, 11:05 AM IST
  • பழைய வரி முறையை அரசாங்கம் முற்றிலும் அகற்றி விடுமா?
  • வரி முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை.
  • வரி அடுக்குகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.
Budget 2025: இந்த பட்ஜெட்டில் பழைய வரி முறை முற்றிலுமாக நீக்கப்படுமா? புதிய வரி அடுக்குகள் வருமா? title=

Union Budget 2025: இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பல வித சலுகைகள், வரி விலக்குகள், புதிய திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், புதிய கொள்கைகள் என இப்படிப்பட்ட அறிவிப்புகளுக்காக மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

வழக்கமாக, பட்ஜெட்டில் அனைத்து துறைகளுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்களுக்கான பிரத்யேக எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த பட்ஜெட் குறித்தும் அப்படிப்பட்ட பல எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால், இம்முறை சில அச்சங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமானது பழைய வரி முறை பற்றியது. பழைய வரி முறையை அரசாங்கம் முற்றிலும் அகற்றி விடுமா? இவற்றில் கிடைத்து வரும் வரிச்சலுகைகள் இனி கிடைக்காதா? நிபுணர்களின் கணிப்பு என்ன? இந்த கேள்விகளுக்கான விடையை இந்த பதிவில் காணலாம்.

New Tax Regime: 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆன புதிய வரி முறை

2020 ஆம் ஆண்டில், மோடி அரசாங்கம் புதிய வரி முறையை அறிமுகப்படுத்தியது. இதில் வரி செலுத்துவோருக்கு குறைந்த வரி விகிதங்களுக்கான விருப்பம் வழங்கப்பட்டது. ஆனால் அதனுடன் பழைய வரி முறையில் இருந்தது போல பல விலக்குகள் இதில் அளிக்கப்படவில்லை. புதிய வரி முறை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, அரசாங்கம் பழைய வரி முறையை முற்றிலுமாக நிறுத்திவிடுமா அல்லது படிப்படியாகக் குறைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 2023 பட்ஜெட்டில் புதிய வரி முறை டீஃபால்ட், அதாவது இயல்புநிலை விருப்பமாக மாற்றப்பட்டாலும், வரி செலுத்துவோர் மத்தியில் இந்த முறை குறித்து இன்னும் சந்தேகங்களும் பல வித கேள்விகளும் உள்ளன.

Finance Minister Nirmala Sitharaman

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் இந்த நேரத்தில், ​​வரி செலுத்துவோர் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் பழைய வரி முறை குறித்து மீண்டும் தீவிரமாக அலோசிக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் இரு வரி முறைகளும் தொடர வேண்டும் என கருதினாலும், வரி செலுத்துவோர் பலருக்கு, அரசாங்கம் இரட்டை வரி முறையை ஒழித்து, ஒரே வரி முறையை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதனால் வரி செலுத்தும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு வருமான வரியை தாக்கல் செய்யும் செயல்முறை சிக்கலற்றதாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து.

Simplification of Tax System: வரி முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை

தற்போது இரண்டு வரி முறைகள் இருப்பது வரி செலுத்துவோருக்கு சிரமங்களை உருவாக்குவதாக வரி நிபுணர்கள் நம்புகின்றனர். குறிப்பாக வருமான வரிப் பொறுப்பைத் தாங்களாகவே கணக்கிடுபவர்களுக்கு, சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை என்றால் எந்த வரி முறை அவர்களுக்கு சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது மிகவும் கடினமாகிவிடும். இதன் காரணமாக வரி செலுத்துவோர் தவறான வரியைத் தேர்ந்தெடுக்கும் ஆபத்து உள்ளது.

New Tax Regime vs Old Tax Regime

இது தவிர, புதிய வரி முறையை முழுமையாக ஏற்றுக்கொள்வது இப்போது காலத்தின் தேவையாகிவிட்டது என்று வரி ஆலோசகர்கள் நம்புகிறார்கள். புதிய வரி முறையின் கீழ், வரி செலுத்துவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. இதற்கு முன்பு வரி விதிக்கப்பட்டது. இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இப்போது பழைய வரியை நிறுத்தி புதிய வரி முறையை ஒரே வரி முறையாக மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

Tax Slabs: வரி அடுக்குகளில் மாற்றங்கள் ஏற்படலாம்

இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் செய்யப்படலாம். அரசாங்கம் ரூ.9 லட்சம் வரை வருமானத்திற்கான வரி விலக்கு வரம்பை அதிகரித்தால், அதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு மேலும் நிவாரணம் கிடைக்கும். இதனுடன், ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கு 25% வரி விகிதத்தை அமல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படலாம். இதனால் அதிக வருமான வரி செலுத்துவோருக்கும் சிறிது நிவாரணம் கிடைக்கும். மேலும் அவர்களின் செலவுகள் அதிகரிக்கும், இதனால் நாட்டின் பொருளாதார நிலையும் மேம்பட்டு, செயல்பாடுகள் வேகம் பெறும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகும், அடிப்படை சம்பளம் அதிரடியாய் உயரும்

மேலும் படிக்க | SIP Mutual Fund: 20 ஆண்டு பரஸ்பர நிதிய தொடர் முதலீட்டில் கையில் ₹6 கோடி இருக்கும்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News