Home Remedy For Joint Pain: வயது மூப்பில் நம்மை ஆட்கொள்ளும் பல வித பிரச்சனைகளில் மூட்டு வலியும் ஒன்று. வயது அதிகரிக்கும் போது, எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் மூட்டு வலி ஏற்படுகின்றது. குறிப்பாக குளிர்காலத்தில் மூட்டுவலி இன்னும் அதிகமாகின்றது. இதை சரி செய்ய பலர் பல வித சப்ளிமெண்ட்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். எனினும், இது சிறிது நேரம் மட்டுமே வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
உணவில் சில மாற்றங்களை செய்வதம் மூலம் மூட்டு வலிக்கு நிரந்தர நிவாரணம் காணலாம். சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று வாழைப்பழம். இது பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இந்த பழம் மூட்டு மற்றும் முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
வாழைப்பழம் சாப்பிடுவது வீக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற வாழைப்பழம் எவ்வாறு உதவும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Banana: வாழைப்பழத்தை எப்படி உட்கொள்வது
மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி இருந்தால், எழுந்து உட்காருவதில் சிரமம் இருந்தால், அதை சரி செய்ய, வாழைப்பழம், பாதாம் மற்றும் திராட்சை ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஷேக் செய்து குடிக்கலாம். இந்த ஷேக்கை தயாரிக்க, 2 வாழைப்பழங்கள், 5 முதல் 6 பாதாம் மற்றும் 10 முதல் 12 திராட்சையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இந்த ஷேக்கை தினமும் குடிக்கவும்.
வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
Potassium: பொட்டாசியம் நிறைந்தது
வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பொட்டாசியம் உடலின் அமில-கார சமநிலையை கட்டுப்படுத்துகிறது. இது தவிர, உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டையும் இது நீக்குகிறது. பொட்டாசியம் ஆரோக்கியமான அமில-கார சமநிலையை ஊக்குவித்து, அதன் மூலம் எலும்புகளை பலப்படுத்துகிறது. இந்த வழியில் இது மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.
Antioxidants: ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்தது
வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை செயலிழக்கச் செய்து மூட்டுகளுக்குள் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேடிவ் சேதத்தைக் குறைக்க உதவும்.
Magnesium: மெக்னீசியத்தின் நல்ல ஆதாரம்
வாழைப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பம்சமாக உள்ளது. இது தசைகள் மற்றும் நரம்புகளை செயல்படுத்த உதவும் ஒரு கனிமமாகும். இது வீக்கம் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது. இது தவிர, மெக்னீசியம் கீல்வாதம் போன்ற நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பாதாம் அல்லது வால்நட்... தினமும் ஊற வைத்து சாப்பிட்டால் அதிக நன்மை எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ