IND vs ENG 2nd T20, Chepauk Match: இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. கடந்த ஜன. 22ஆம் தேதி நடந்த முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கிறது. கடந்த செப்.19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சென்னையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுதான்.
IND vs ENG: மெட்ரோ மற்றும் MTC பேருந்து இலவசம்
மேலும், இன்று வார இறுதி நாள் என்பதால் மைதானத்தில் பார்வையாளர்கள் கூட்டமும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி போட்டியை காண வரும் பார்வையாளர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மெட்ரோ மற்றும் MTC பேருந்துகளில் பார்வையாளர்கள் இன்று போட்டி தொடங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்னர் முதல், போட்டி முடிந்து மூன்று மணிநேரம் பின்னர் வரை இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரோகித் சர்மா மீண்டும் சொதப்பல்..! அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் மோசமாக அவுட்
IND vs ENG: சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி இருக்கும்?
சென்னையில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும், இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணிகள் பந்துவீச்சையே தேர்வு செய்யும். சுழற்பந்துவீச்சுக்கு மட்டுமின்றி ஆரம்ப கட்ட ஐபிஎல் போட்டிகளை போல ஆடுகளம் பேட்டிங்கிற்கும் நன்கு சாதகமாக இருக்கலாம். அப்படியிருக்க இரண்டு அணிகளும் நம்பர் 8 பேட்டர்களை அடுக்கி வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கடந்த டி20 போட்டியிலேயே எதிர்பார்க்காதபடி ஷமி விளையாடவில்லை. மேலும், அவருக்கு பதில் ரவி பிஷ்னோய் கூடுதல் ஸ்பின்னராக விளையாடினார். அந்த வகையில், இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் என்ன மாற்றம் இருக்கும் என பலரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். பெரியளவில் மாற்றம் இருக்காது. வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மட்டுமே செயல்பட்டனர். அதுவே இந்த போட்டியிலும் தொடரும்.
IND vs ENG: பிளேயிங் லெவனில் வரும் ஒரே ஒரு மாற்றம்
சேப்பாக்கத்தில் சுழற்பந்துவீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் வந்தால் அவரால் புதிய பந்திலும் இந்திய அணிக்கு பலமாக இருப்பார்.
ஒருவேளை சுழற்பந்துவீச்சு கைக்கொடுத்தால் மிடில் ஓவர்களில் அக்சர் பட்டேல், வருண், பிஷ்னோய் கூட்டணி இன்னும் நெருக்கடி கொடுக்கலாம். இங்கிலாந்து அணி ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஸ் அட்கின்சனுக்கு பதில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக ரெஹான் அகமது விளையாடலாம் என கூறப்படுகிறது.
IND vs ENG: பிளேயிங் லெவன் கணிப்பு
இந்திய அணி (கணிப்பு): சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி
இங்கிலாந்து அணி (கணிப்பு): ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), பில் சால்ட், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜேக்கப் பெத்தல், லியம் லிவிங்ஸ்டன், ஜேமி ஓவர்டன், அடில் ரஷீத், ஜோப்ரா ஆர்ச்சர், ரெஹான் அகமது, மார்க் வுட்
மேலும் படிக்க | ரோகித், ரஹானே விக்கெட்டை அள்ளிய ஜம்மு காஷ்மீர் பவுலர் உமர் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ